அமெரிக்காவில் குவாட் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு அமெரிக்கா வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


அமெரிக்கா சென்ற பிரதிமர் மோடி அந்த நாட்டில் உள்ள டெலவேரில் உள்ள கிரீன்வில்லேவில் அந்நாட்டு அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார். பிரதமர் மோடிக்கு ஜோ பைடன் உற்சாக வரவேற்பு அளித்தார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்தித்த புகைப்படங்களை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.






பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “ டெலாவேரில் உள்ள கிரீன்வில்லில் உள்ள அவரது இல்லத்தில் எக்கு விருந்து அளித்த அதிபர் பைடனுக்கு நன்றி..எங்கள் பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த சந்திப்பின்போது பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது என்று பதிவிட்டுள்ளார்.


இந்த சந்திப்பு குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “ இந்தியாவுடனான அமெரிக்காவின் கூட்டாண்மை வரலாற்றில் எப்போதும் இல்லாததைவிட  வலுவாகவும், நெருக்கமாகவும் மற்றும் ஆற்றல் மிக்கமானதாகவும் உள்ளது.”


இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்






மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் குவாட் மாநாட்டிற்கு பிறகு ஐ.நா. சபையில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.


குவாட் மாநாட்டிற்குச் சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் மட்டுமின்றி குவாட்டில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா, ஜப்பான் நாட்டு தலைவர்களையும் சந்திக்கிறார்.