மணிப்பூரில் நடக்கும் வன்முறையை கையாள்வதில் இந்தியாவுக்கு உதவ அமெரிக்கா தயாராக இருப்பதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்துள்ளார். அமெரிக்காவைப் பொறுத்தவரை, மணிப்பூரில் நடப்பது மனித அக்கறை என்றும், அமைதி கடைப்பிடிக்கப்பட்டால் அதிக முதலீட்டைக் கொண்டு வர முடியும் என்றும் கார்செட்டி கூறியுள்ளார்.






மெய்டீஸ் சமூகத்தின் பட்டியல் பழங்குடி அந்தஸ்து கோரிக்கையை எதிர்த்து 'பழங்குடியினர் ஒற்றுமை அணிவகுப்பு' ஏற்பாடு செய்யப்பட்ட பின்னர் மணிப்பூரில் கலவரம் தொடங்கியது. அப்போதிருந்து, மெய்டீஸ் மற்றும் Kuki சமூகங்களுக்கு இடையிலான இன வன்முறையில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 


இந்த நிலையில் நேற்றைய தினம் கொல்கத்தாவிற்கு தனது முதல் பயணமாக கார்செட்டி சென்றார். அங்கு மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் மற்றும் முதன்மை தலைமை ஆலோசகர் ஆகியோரை சந்தித்து பொருளாதார வாய்ப்புகள், பிராந்திய இணைப்புத் திட்டங்கள், கலாச்சார உறவுகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதித்தார். இரு நாடுகளும் அமைதி மற்றும் முன்னேற்றத்திற்காக எதிர்காலத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்றார். 


கொல்கத்தாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய தூதுவர் எரிக் கார்செட்டி, "முதலில் மணிப்பூரைப் பற்றி பேசுகிறேன். அங்கு அமைதிக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். இதை ஒரு கவலையாக நான் நினைக்கவில்லை. இது மனித அக்கறை பற்றியது” என கூறியுள்ளார்.


"மணிப்பூரில் நடக்கும் கலவரத்தில் குழந்தைகள் மற்றும் தனிநபர்கள் இறப்பதைப் பார்க்கும்போது கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது. இந்த வன்முறை குறித்து கவலைப்பட நீங்கள் இந்தியராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, மேலும் பல நல்ல விஷயங்களுக்கு அமைதிதான் முன்னோடி என்பதை நாங்கள் அறிவோம். வடகிழக்கில் நல்ல விஷயங்கள் நிறைய உள்ளது. ஆனால் அவை, அமைதி இல்லாமல் தொடர முடியாது" என்று அவர் தெரிவித்துள்ளார்.


இது இந்திய விவகாரமாக இருந்தால் கூட, அமெரிக்காவிடம் உதவி கேட்டால் அதனை செய்ய தயாராக உள்ளதாகவும்,  விரைவில் அங்கு அமைதி நிலவ வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.