UPSC முதல்நிலைத் தேர்வு ஜூன் 16 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்வுக்கான அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அட்மிட் கார்டை எப்படி பதிவிறக்கம் செய்வது குறித்தான விவரங்கள் மற்றும் இணையதளம் லிங்க் பற்றிய பிற விவரங்களை எப்படி என்று பார்க்கலாம்.
UPSC முதல்நிலைத் தேர்வு நுழைவுச்சீட்டு :
IAS , IPS, IFS உள்ளிட்ட பதவிகளுக்கான, 2024 ஆம் ஆண்டுக்கான முதல்நிலை தேர்வானது வரும் ஜூன் 16 ஆம் தேதி நடைபெறவுள்ளது. காலை முதல் தாளும் , பிற்பகல் 2 ஆம் தாளும் என இரண்டு தேர்வுகள் நடைபெறவுள்ளது. இந்நிலையில், முதல் நிலை தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ( அட்மிட் கார்டு ) வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள்:
- அதிகாரப்பூர்வ இணையதளம் — upsc.gov.in ஐப் பார்வையிடவும்,
- அதில் முகப்பு பக்கத்தில் உள்ள What’s New என்பதில் UPSC CSE Prelims 2024 அட்மிட் கார்டுக்கான அறிவிப்பைக் கிளிக் செய்யவும்.
- அதையடுத்து , புதிய வலைதள பக்கம் தோன்றும் அதில் கேட்கப்பட்டுள்ள தேவையான விவரங்களை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்.
- அதற்கு, உங்களது Registered Number தேவை.
- Registered Number, உங்களது இ- மெயிலுக்கு அனுப்பப்பட்டிருக்கும் , அதை வைத்து நீங்கள் லாக் இன் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- இந்த இணைப்பு கிளிக் செய்து வலைதள பக்கத்துக்குச் செல்லலாம். UPSC
அல்லது உங்களால் Registered Number-ஐ கண்டுபிடிக்க முடியவில்லை என்றால். Forgot id என்பதை கிளிக் செய்து, உங்களது பெயர் , உங்களது தந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களின் மூலம் உங்களது பதிவெண்ணை பெற்றுக் கொள்ளலாம்.
இதையடுத்து, பதிவிறக்கம் செய்த அட்மிட் கார்டை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும். மேலும், அட்மிட் கார்டு உள்ள விவரங்களை கவனமாக படித்து தேர்வுக்கு நாளில் தேவையானவற்றை தயார் செய்து கொள்ளுங்கள்.