தமிழ்நாடு:
- நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் - தேர்வு மூலம் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டது தமிழ்நாடு அரசு
- பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை - அமைச்சர் தங்கம் தென்னரசு
- தமிழ்நாட்டில் ஜூன் 17 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி அறிவிப்பு
- முறைகேடுகளுடன் நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்
- மானிய கோரிக்கை மீதான விவாதம் - தமிழக சட்டப்பேரவை ஜூன் 24ல் கூடுகிறது
- மக்களவை தேர்தல் வாக்குகள் மூலம் மாநில கட்சி அந்தஸ்து பெற்ற விசிக, நாம் தமிழர் கட்சி - த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து
- மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை
- நீட் தேர்வை ஒழித்துக்கட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை - முதல்வர் ஸ்டாலின் காட்டம்
- நெல்லையப்பர் கோயில் ஆனித்தேரோட்டம் - நெல்லை மாவட்டத்திற்கு ஜூன் 21 உள்ளூர் விடுமுறை
- பள்ளி, கல்லூரிகள் திறப்பு - இம்மாத இறுதிக்குள் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்கப்படும் என போக்குவரத்து துறை அறிவிப்பு
- சென்னை மாதவரத்தில் ஆவின் பால் விநியோகம் பாதிப்பு - பொதுமக்கள் அவதி
- பொறியியல் படிப்புக்கான விண்ணப்பிக்கும் கால அவகாசம் நிறைவு - ஜூலை 10ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
- பள்ளிகள் திறப்பு எதிரொலியாக சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்களால் ரயில் ,பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசல்
இந்தியா:
- நாளை இரவு 7.15 மணிக்கு பிரதமராக பதவியேற்கிறார் மோடி - குடியரசு தலைவர் மாளிகை அறிவிப்பு
- இந்தியா கூட்டணி ஒருபோதும் நாட்டுக்காக உழைத்தது இல்லை என நிதிஷ்குமார் கடும் தாக்கு
- உலகின் சக்தி வாய்ந்த தலைவர் பிரதமர் மோடி - சந்திரபாபு நாயுடு புகழாரம்
- மோடி பிரதமராக இருக்கும் வரை இந்தியா யாருக்கும் தலை வணங்காது - பவன் கல்யாண் பேச்சு
- அடுத்த 10 ஆண்டுகளில் புதிய அத்தியாயத்தை பாஜக படைக்கும் - பிரதமர் மோடி உறுதி
- தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் மோடி தேர்வு
- பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு பெங்களூரு நீதிமன்றம் ஜாமீன்
- மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் கேட்ட அரவிந்த் கெஜ்ரிவால் - அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு
- போலி ஆதார் கார்டுடன் நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைய முயன்ற 3 பேர் கைது
- ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு
உலகம்:
- சிரியாவில் பள்ளி பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு
- ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி இந்திய மருத்துவ மாணவர்கள் 4 பேர் உயிரிழப்பு
- பாகிஸ்தானின் பஞ்சாப் சட்டசபையில் பஞ்சாபி மொழியில் பேச எம்.எல்.ஏ.க்களுக்கு அனுமதி
- விண்வெளி மையம் சென்ற சுனிதா வில்லியம்ஸ் - மகிழ்ச்சியில் நடனமாடும் வீடியோ வைரல்
விளையாட்டு:
- 2024 டி20 உலக்கோப்பை போட்டி: ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து, வங்க தேசம் - இலங்கை, நெதர்லாந்து - தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா - இங்கிலாந்து, ஆகிய போட்டிகள் இன்று நடைபெறுகிறது
- டி20 உலகக்கோப்பை போட்டியில் - நமீபியாவை வீழ்த்தி ஸ்காட்லாந்து வெற்றி
- டி20 உலக்கோப்பை போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி கனடா அணி வெற்றி