பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேசத்தில் பண்டேல்கண்ட் விரைவுச்சாலையை இன்று திறந்து வைத்துள்ளார்.
இதுகுறித்து தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்களை கீழே பார்க்கலாம்.
- இந்த விரைவுச்சாலை பிராந்தியத்தில் இணைப்பு மற்றும் தொழில்துறை வளர்ச்சியை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 14,850 கோடி ரூபாய் செலவில் 296 கிமீக்கு நான்கு வழி விரைவுச் சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
- கடந்த 2020ஆம் ஆண்டு, பிப்ரவரி 29 அன்று பிரதமரால் இந்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அதிவேக நெடுஞ்சாலையின் பணிகள் 28 மாதங்களுக்குள் முடிக்கப்பட்டுள்ளன.
- உத்தரபிரதேச விரைவுச்சாலைகள் தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்தின் ஆதரவில் இந்த விரைவுச்சாலை கட்டப்பட்டது. பின்னர் ஆறு வழிச்சாலையாக விரிவாக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- பிராந்தியத்தில் இணைப்பை மேம்படுத்துவதுடன், அதிவேக நெடுஞ்சாலையானது பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் ஊக்கத்தை அளிக்க உள்ளது.
- விரைவுச்சாலைக்கு அடுத்தபடியாக பண்டா மற்றும் ஜலான் மாவட்டங்களில் தொழில்துறை வழித்தடத்தை உருவாக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்