RRTS ரயில் இந்தியாவின் அதிவேக மெட்ரோ ரயில்கள் மற்றும் முதல் பிராந்திய விரைவு ரயில் ஆகும். தற்போது, டெல்லி-மீரட் ரேபிட் ரயிலின் அமைப்பான என்சிஆர்டிசி துஹாய் டெப்போவில் சோதனை ஓட்டங்களை நடத்தி வருகிறது. இந்த ரயில்களை ரேபிட் ரயில் தயாரிப்பாளரான அல்ஸ்டாமிடம் இருந்து துஹாய் டெப்போ சமீபத்தில் 4 புதிய ரயில் பெட்டிகளை பெற்றது. 






ஆர்.ஆர்.டி.எஸ்.


இந்த நிலையில் RRTS தனது முதல் சோதனை ஓட்டத்தை துஹாய் டிப்போ மற்றும் காசியாபாத் இடையே நடத்தியது. மின்சார சோதனைக்கான முதன் முறையாக துஹாய் டிப்போவிலிருந்து எடுக்கப்பட்ட இந்த ரயிலில் பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பணியாளர்கள் பயணித்தனர்.


இது அவர்களுக்கு முதல் அனுபவமான இருந்தது. ஓவர் ஹெட் உபகரணங்கள் அடங்கிய மின்சார கம்பி இணைக்கப்பட்டு, 25 KB திறனில் சார்ஜுடன் 25 கீமீ தூரத்திற்கு சோதனை செய்யப்பட்டது. இருப்பினும் இது சோதனை ஓட்டம் என்று சொல்ல முடியாது என என்சிஆர்டிசி தெரிவித்தது. 






160 கி.மீ.


காசியாபாத் முதல் துஹாய் வரையிலான இந்த ஓட்டத்தில் 17 கிமீ சுற்றளவு பாதையில், இந்த ரயிலானது மணிக்கு 160 கி.மீ வேகத்தில் பயணித்துள்ளது. இது நாட்டிலேயே ரயில்கள் அடைந்த அதிவேகங்க ரயில்களில் ஒன்றாகும். இந்த அதிநவீன ஏரோடைனமிக் ரயில்கள் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் குஜராத்தின் சாவ்லியில் உள்ள ஒரு உற்பத்தி நிலையத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன.


நாட்டின் முதல் 82 கிமீ நீளமுள்ள RRTS திட்டம் ₹ 30,274 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. மேலும் டெல்லி, காசியாபாத் மற்றும் மீரட் ஆகிய நகரங்களை அதிவேக RRTS ரயில் இணைப்புடன் இணைக்கிறது. டெல்லியை சுற்றியுள்ள நகரங்களுடனான தொடர்பை மேம்படுத்துவதற்கான பணிகள் முழுவீச்சில் தற்போது நடைபெற்று வருகின்றனர். இதன்மூலம் டெல்லியில் மக்கள் நெருக்கடியை குறைப்பதுதான் இதன் நோக்கம். 






சமீப ஆண்டுகளில் நாடு முழுவதும் அதிவேக மற்றும் அரை-அதிவேக ரயில்கள் வரத் தொடங்கியுள்ளன, அதாவது வந்தே பாரத் 2.0, இது 52 வினாடிகளில் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டும். அதிகபட்சமாக 180 கிமீ வேகம் வரை செல்லும்.


எப்போது தொடக்கம்..? 


நாட்டின் முதல் இந்த RRTS ரயிலின் முக்கிய சோதனை ஓட்டம் இன்னும் நடக்கவில்லை, இந்த சோதனை ஓட்டம் ஜனவரி கடைசி வாரம் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் நடக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த ரயிலை உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கொடியசைத்து துவக்கி வைக்கிறார். இந்த ரயிலானது மணிக்கு சுமார் 160 முதல் 180 கிமீ வேகத்தில் ஓடக்கூடிய திறன் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.