Madhya Pradesh : மத்திய பிரதேசத்தில் 256 டைனோசர் முட்டைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
டைனோசர்
டைனோசர் என்றாலே நாம் ஒவ்வொருவருக்கும் ஆச்சரியம் ஏற்படும். பிரமாண்டமான இந்த டைனோசர்கள் பற்றி நிறைய கதைகளும், திரைப்படங்களும் வந்து கொண்டே இருக்கின்றன. குறிப்பாக நாம் அனைவரையும் ஆச்சிரயத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு திரைப்படம் வந்தது. 1997-ம் ஆண்டு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் வெளியான 'ஜூராசிக் பார்க்' திரைப்படம் நம்மால் என்றும் மறக்க முடியாது. அந்தப் படம், டைனோசரை நம் கண்முன் கொண்டு வந்து நிற்பது போல் இருக்கும். இந்த படத்தை யாராலும் மறக்க முடியாது-
ஆனால் நாம் திரைப்படத்தில் பார்ப்பது போன்று உண்மையான டைனோசர்கள் இருக்காது. திரைப்படத்தில் பார்க்கும் டைனோசர்களுக்கு உண்மையான டைனோசர்களுக்கு நிறைய வேறுபாடுகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். டைனோசர்களில் 40 வகையான டைனோசர்கள் இருக்கின்றன. அதாவது தாவர உண்ணி, ஊன் உண்ணி உள்ளட்ட அமைப்புகளின் இருக்கின்றன. டைனோசர்களின் உடல் அமைப்பை தெரிந்து கொள்ளும் வகையில் சில எலும்புகள் கிடைத்துள்ளன. இருந்தாலும் ஒரு சில வகையான டைனேசர்களின் உடல் அமைப்பை தெரிந்து கொள்ளும் வகையில் இதுவரை எந்த எலும்புகளும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
டைனோசர் 7 மீட்டர் நீளமும் சுமாராக 10 ஆயிரம் கிலோ எடையும் கொண்டதாகும். ஆனால் இந்த இனத்தின் முழு எலும்புக்கூடும் தற்போது வரை கிடைக்கவில்லை என்பதால் இதனை அங்கீகரிப்பட்ட ஒரு இனமாக கருத முடியாது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மத்திய பிரசேத மாநிலம் நர்மதை பள்ளத்தாக்கு பகுதியில் டைனோசர் கூடுகள் மற்றும் 256 முட்டைகள் கண்டுடெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
டைனோசர் கூடுகள், முட்டைகள்
டெல்லி பல்கலைக்கழகம், மோகன்பூர்-கொல்கத்தா மற்றும் போபால் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இதனை கண்டுபிடித்துள்ளது. ஆராய்ச்சியாளர்கள், மத்தியப் பிரதேச மாநிலத்தின் நர்மதை பள்ளத்தாக்கில் தார் மாவட்டத்தில் உள்ள பாக் மற்றும் குக்ஷி பகுதிகளில் 256 புதைப்படிவ முட்டைகளையும், கூடுகளையும் கண்டுபிடித்துள்ளனர்.
இவை அளவில் மிகப்பெரியவை. இது குறித்த ஆய்வுத்தகவல்கள் பிளாஸ் ஒன் என்ற ஆராய்ச்சி பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது கிடைத்த டைனோசர் முட்டைகள் மற்றும் கூடுகள் 6 கோடியே 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பகுதியில் நீண்ட கழுத்துக் கொண்ட டைனோசர்களின் வாழ்க்கையைப் பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
நர்மதை பள்ளத்தாக்கு:
இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஒருவர் கூறியதாவது, ”டெதிஸ் கடல், நர்மதையுடன் இணைந்த இடத்தில் உருவான கழிமுகத்தில் இருந்து டைனோசர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நர்மதை பள்ளத்தாக்கில் காணப்படும் கூடுகள் ஒன்றோடொன்று நெருக்கமாக இருந்த கூடுகள். பொதுவாக ஒன்றுக்கொன்று சிறிது தூரத்தில் அமைந்திருக்கும். நர்மதை பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள டைனோசர் முட்டைகள் 15 செ.மீ. முதல் 17 செ.மீ. வரையிலான விட்டம் கொண்டவை. ஒவ்வொரு கூட்டிலும் 1 முதல் 20 முட்டைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன" என்று அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து, ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது, "2017-ம் ஆண்டுக்கும், 2020-ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடத்தப்பட்ட கள ஆய்வுகளின்போது தார் மாவட்டத்தில் பாக் மற்றும் குஷி பகுதிகளில் குறிப்பாக அகாடா, தோலியாராய் புரியா, ஜாபா, ஜாம்னியாபுரம், பாட்லியா கிராமங்களில் டைனோசர்கள் குஞ்சு பொரிப்பது பற்றி விரிவாக கண்டறிந்தோம்" என்றார்.