உத்தரபிரதேசம் லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் கையில் துப்பாக்கியுடன் சிம்ரன் என்கிற பெண் ஒருவர் எடுக்கும் இன்ஸ்டா ரீல்சானது வைரலானது.
சமூக வலைதளம்:
சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோக்களை பதிவேற்றம் செய்வது பலருக்கு தினசரி வாடிக்கையாகிவிட்டது. அதில் நடனம், நகைச்சுவை, மாடலிங் உள்ளிட்ட வீடியோவை பதிவேற்றம் செய்கின்றன. இதில் சிலர் மக்களுக்கு பயனுள்ள தகவலையும் பதிவிடுகின்றனர். சிலர் சட்டத்துக்கு எதிராக இருக்கும் வகையிலான வீடியோக்களையும் ரீல்ஸ்க்காக எடுக்கின்றனர். இந்நிலையில், லக்னோவில் உள்ள நெடுஞ்சாலையில் பெண் ஒருவர் துப்பாக்கியுடன் ரீல்ஸ் செய்யும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி. இன்ஸ்டா பிரபலம்:
உத்தரபிரதேசத்தின் லக்னோ பகுதியைச் சேர்ந்த சிம்ரன் யாதவ் என்கிற பெண் இன்ஸ்டாவில் பிரபலமாக உள்ளார். இவர் உத்திர பிரதேசத்தில் சமீபத்தில் இன்ஸ்டாவில் பதிவேற்றிய ரீல்சானது, மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளானது. அந்த வீடியோவில், உத்திர பிரதேசம் லக்னோவின் உள்ள நடுரோட்டில் நின்று கொண்டு துப்பாக்கியுடன் நடனமாடி ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து பலரும் காவல்துறையை டேக் செய்தனர்.
நடவடிக்கை:
இதையடுத்து, உத்தரபிரதேச காவல்துறையானது, லக்னோ காவல்துறையைக் குறிப்பிட்டு, “ இதை பாருங்கள் என்று ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து, இது குறித்து விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும், மேலும் தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட பட்டுள்ளதாகவும் லக்னோ காவல்துறையின் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இன்ஸ்டா பிரபலத்தின் மீது தகுந்த நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.