பொதுவாக திருமணங்கள் நாம் செல்வது மணமகன் மற்றும் மணமகளை வாழ்த்துவதற்காகத் தான். ஆனால் ஒருவர் திருமணத்திற்கு வாழ்த்த சென்ற இடத்தில் மணமகனாக மாறி திருமணம் செய்துள்ளார். அவருக்கு அப்படி ஜாக்பாட் அடிக்க காரணம் என்ன? அப்படி திடீரென திருமண மாப்பிள்ளையை மாற்ற வேண்டிய காரணம் என்ன?
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் மகாராஜ்பூர் என்ற பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த திருமணம் செய்தி அல்ல. அதில் நடந்த சம்பவம்தான் செய்தி. இந்த திருமணத்தில் மணமகன் திருமண சடங்குகள் அனைத்தையும் செய்துள்ளார். திருமண நாள் அன்றும் காலையில் அனைத்து சடங்குகளையும் செய்துள்ளார். பின்னர் இறுதியான திருமண சடங்கு செய்யும் போது மணமகன் திருமண மண்டபத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து செய்வது அறியாது இருந்த மணமகள் குடும்பத்தினர் மிகவும் சோகத்துடன் இருந்துள்ளனர். அப்போது அவர்களுடைய உறவினர்கள் கொடுத்த அறிவுரை வழங்கியுள்ளனர். அவர்களின் அறிவுரையின் பெயரில் திருமணத்திற்கு வந்த விருந்தினரில் ஒருவரை அக்குடும்பம் தேர்வு செய்து மணமகனாக்க முடிவு செய்துள்ளது. இதற்கு மணமகளுக்கு சம்மதம் அளிக்க திருமணத்திற்கு வந்த ஒருவர் மணமகனாக அமர்ந்து திருமணம் செய்துள்ளார்.
எனினும் திருமண நாள் அன்று ஓடிய அந்த நபர் மீது பெண் வீட்டார், காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். அதேசமயத்தில் ஓடிய நபரின் தந்தையும் தனது மகனை கண்டுபிடித்து தருமாறு காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் கான்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.