2020 பிப்ரவரி 1-ஆம் தேதியிலிருந்து காலாவதியான மோட்டார் வாகன ஆவணங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31 வரை நீட்டித்து மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளது. 


கொரோனா தொற்றால் நடைமுறையில் உள்ள ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள வாகன உரிமையாளர்களுக்கு உதவும் வகையில்  உரிமம், பதிவு, அனுமதி ஆகியவற்றை புதுப்பிக்க அளிக்கப்பட்டுள்ள கால அவகாசத்தை நீட்டித்து வருகிறது.  


விதிகளை மீறி இயங்கிய 207 வாகனங்களுக்கு ரூ.18.50 லட்சம் அபராதம்!


முன்னதாக, கடந்த 2020 பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 2021 அக்டோபர்  31ம் தேதி வரை காலாவதியாகும் அனைத்து ஆவணங்களையும், 2021 அக்டோபர்  31ம் வரை செல்லுபடியாகும் ஆவணங்களாக கருதும்படி அமலாக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த அவகாசத்தை தற்போது டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  


 


 


மோட்டார் வாகனவரியைச் செலுத்துவதற்கு எந்தவித அபராதமும் இல்லாமல் அரசு காலநீட்டிப்பு செய்துள்ளதால், வாகன ஆவணங்களைச் சோதனையிடுவதால் ஏற்பட்டுள்ள பணிச்சுமை குறைந்து, அதிகாரிகள் கொரோனா தொற்று தொடர்பான பணிகளில் முழுவதுமாக கவனம் செலுத்த வழி ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.   


கொரோனா தொற்றால் நடைமுறையில் உள்ள ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள வாகன உரிமையாளர்களுக்கும், பிற மாநிலங்களில் சிக்கி, சொந்த ஊருக்கு வரமுடியாமல் தவிக்கும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கும் இந்த அறிவிப்பு நிம்மதியை அளிக்கும்.   






இருப்பினும், இந்த உத்தரவை, செயல்படுத்தும் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் , அப்போதுதான் இதனை முழுமையாகச் செயல்படுத்த முடியும் என்ற வாகன உரிமையாளர்கள் தெரிவிகின்றனர். 


தொடர்ந்து வாசிக்க: 


Election Commission: தலைமை தேர்தல் ஆணையருக்கு உத்தரவு: லட்சுமண ரேகையை மீறிய மத்திய அரசு!