வருகின்ற செப்டம்பர் 18ம் தேதி முதல் 5 நாட்களுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் கோஷி அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டத்தொடர் செப்டம்பர் 18-22 ம் தேதி வரை கேள்வி நேரம் அல்லது எந்த உறுப்பினரும் பிரச்சினைகளை எழுப்ப முடியாது என்று மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகங்கள் நேற்று தெரிவித்தன. மேலும், 5 அமர்வுகள் கொண்ட இந்த தொடரின் தற்காலிக நிகழ்ச்சிநிரல் தொடர்பாக தனியே தெரிவிக்கப்படும் என்று ஒரு அவைகளின் செயலகங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து வெளியிட்டப்பட்ட அறிக்கையில், “பதினேழாவது மக்களவையின் 13-வது அமர்வு 2023 செப்டம்பர் 18-ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்கும் என்று உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. கேள்வி நேரமின்றி நடைபெறும் இந்த சிறப்பு கூட்டத்தொடர், புதிதாக நாடாளுமன்ற கட்டிடத்தின் நடைபெறும் என்று கூறப்படுகிறது. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்திற்கான சாத்தியக்கூறுகளை ஆராய உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளதால், நடப்பு மக்களவை கடைசி கூட்டத்தொடராக இந்த சிறப்பு கூட்டத்தொடர் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக, பாராளுமன்றத்தில் பயனுள்ள விவாதங்கள் நடத்த ஆவலுடன் காத்திருக்கிறேன் என அமைச்சர் ஜோஷி தெரிவித்தார்.
ஒரு வருடத்தில் பொதுவாக மூன்று நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும். அது, பட்ஜெட், மழைக்காலம் மற்றும் குளிர்கால அமர்வுகள் ஆகும். கடந்த மே 28-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இந்த அமர்வு நடைபெற இருக்கிறது.
கடந்த மாதம் நிறைவடைந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. இந்தநிலையில், இந்த சிறப்பு கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கு கட்சிகள் தயாராகிவரும் நிலையில், இந்த கூட்டம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமான நவம்பர் கடைசி வாரத்தில் தொடங்கும்.