தமிழ்நாடு:



  • சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு; உருவாகிறதா புதிய கூட்டணி..?

  • நடிகை விஜயலட்சுமி புகாரில் விரைவில் கைதாகிறதா சீமான்? 5 தனிப்படை கோவை விரைந்தது.

  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலுன் கரத்தை வலுப்படுத்தும் வகையில் இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

  • தமிழ்நாட்டில் வருகின்ற 8ம் தேதி முதல் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

  • கிளம்பாக்கம் பேருந்து நிலையம் பராமரிப்பு பணிகள் , தனியார் வசம் செல்லப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • மயிலாடுதுறை மாவட்டத்தில் விஷ வண்டுகள் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அளித்துள்ளார்.

  • விஜயலட்சுமி தன் மீதான அவதூறு குறித்த ஆதாரத்தை வெளியிட முடியுமா என்று நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

  • சிங்கப்பூர் அதிபராக பொறுப்பேற்க உள்ள தமிழர் தர்மன் சண்முகரத்னத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

  • 'நாம் தமிழரை விட 30 சதவீத வாக்குகள் கூடுதலாக வாங்கி காட்டுகிறோம்’ - சீமானுக்கு அண்ணாமலை சவால்

  • சென்னை-லண்டன் தினசரி விமானத்தில், பயணிகள் அதிகமாக பயணம் மேற்கொண்டு வந்தனர். பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த ஒரு வாரமாக இயக்கப்படவில்லை.


இந்தியா: 



  • சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக பாய்ந்தது - 125 நாட்கள் பயணம் செய்து இலக்கை எட்டும்

  • ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய 8 பேர் கொண்ட உயர்மட்ட குழு அறிவிப்பு - உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உறுப்பினர்களாக சேர்ப்பு

  • டெல்லியில் ஜி20 மாநாட்டுக்கு முன்பாக பிரதமர் மோடி - பைடன் வரும் 8ம் தேதி சந்திப்பு : வெள்ளை மாளிகை அறிவிப்பு

  • ஒடிசா ரயில் விபத்து : 3 அதிகாரிகளுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிக்கை : ஆதாரங்களை அழித்ததாக குற்றச்சாட்டு

  • விரைவில் தொகுதி பங்கீடு முடியும்; அக்டோபர் 2ம் நாடு முழுவதும் இந்தியா கூட்டணி நிகழ்ச்சிகள் - பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவிப்பு 

  • சிங்கப்பூர் அதிபரானார் தமிழர் தர்மன் - பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து


உலகம்: 



  • எக்ஸ் தளத்தில் பயனரின் ஒப்புதலுடம் மட்டுமே பயோமெட்ரிக் தகவல்கள் எலான் மஸ்க் அறிவிப்பு.

  • தலிபான்கள் ஆட்சிக்கு பிறகு அமெரிக்காவில் குடியேற 8 லட்சம் ஆப்கானிஸ்தான் மக்கள் காத்திருக்கின்றனர்.

  • தைவானில் ஏற்பட்ட புயல் காரணமாக 45 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

  • பாகிஸ்தான் நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 300 ஐ கடந்தது. 


விளையாட்டு: 



  • ஆசியக் கோப்பை 2023: இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி கனமழை காரணமாக கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. 

  • உலகக் கோப்பை 2023: இந்தியா -பாகிஸ்தான் ஆட்டத்திற்கான டிக்கெட்கள் இன்று விற்பனைக்கு வருகிறது.

  • ஆசியக் கோப்பை கிரிக்கெட் : ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் இன்று பலப்பரீட்சை

  • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் சரிவில் இருந்து மீண்டு வெற்றியை வசப்படுத்திய செர்பிய வீரர் ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

  • ஆசிய ஆண்கள் 5 பேர் ஆக்கி இறுதிப்போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் 

  •