இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டையொட்டி டிராய் ஏற்பாடு செய்திருந்த 'ஒலிபரப்புத் துறையில் வளர்ந்து வரும் போக்குகள் மற்றும் தொழில்நுட்பங்கள்' என்ற தலைப்பிலான கருத்தரங்கை தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல். முருகன் இன்று தொடங்கி வைத்தார்.

Continues below advertisement

அதில் பேசிய அவர், இந்தியாவின் ஒலிபரப்புத் துறையில் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் உருமாறும் தாக்கத்தை சுட்டிக்காட்டினார். உள்ளடக்கம் (Content) பார்வையாளர்களுக்கு முதன்மை மையமாக மாறியுள்ளது என்று அவர் கூறினார்.

"234 நகரங்களில் பண்பலை வானொலி அலைவரிசைகள்"

Continues below advertisement

சமூக, பொருளாதார, அரசியல் தளங்களில் நலிவடைந்த பிரிவினரை உள்ளடக்குவதற்காக ஒளிபரப்பு சேவைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

எளிதாக வர்த்தகம் செய்வதை மேம்படுத்தும் வகையில், நெறிப்படுத்தப்பட்ட ஒற்றைச் சாளர முறை மூலம் இந்தியாவில் உள்ளடக்க உற்பத்தியை ஊக்குவித்து, ஏவிஜிசி துறையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரமாக இந்தியாவின் வளர்ச்சி இருப்பதாகவும், இது உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுக்கும் பயனளிப்பதாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். உள்ளூர் உள்ளடக்கத்தை அதிகரிக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் 234 புதிய நகரங்களில் பண்பலை வானொலி அலைவரிசைகளை ஏலம் விட மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்ததையும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மத்திய அமைச்சர் எல். முருகன் பேசியது என்ன?

பொருளாதார வளர்ச்சி மற்றும் கலாச்சார பரவலில் ஒலிபரப்புத் துறையின் பங்கை வலுப்படுத்தவும், அனைவருக்கும் உயர்தர ஊடக உள்ளடக்கத்திற்கான அணுகலை உறுதி செய்யவும் தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பயன்படுத்துவதற்கான அரசின் உறுதிப்பாட்டை அமைச்சர் எல். முருகன் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

தொடர்ந்து பேசிய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் சஞ்சய் ஜாஜு, வளர்ச்சி  சார்ந்த  கொள்கைகள் மற்றும் ஒலிபரப்புத் துறையை செயல்படுத்துவதற்கான முன்முயற்சிகளை வடிவமைப்பதில் அமைச்சகத்தின் பங்கை எடுத்துரைத்தார்.

ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டை மேம்படுத்தும் மற்றும் சிறந்த ஒலி தரத்தை வழங்கும் விலை குறைவான வெகுஜன தகவல் தொடர்பு கருவியாக டிஜிட்டல் வானொலியின் திறன் உள்ளதாக அவர் கூறினார். 

இன்றைய கருத்தரங்கு பல்வேறு ஒலிபரப்பு பயன்பாட்டு நிகழ்வுகளில் அதிவேக தொழில்நுட்பங்களின் நடைமுறை பயன்பாடுகள் மற்றும் உருமாறும் திறனை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. விவாதங்கள் அடுத்தடுத்து மூன்று அமர்வுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த அமர்வுகளில் தொலைத் தொடர்புத் துறை, தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலிபரப்பு பிரிவின் தொழில்நுட்ப வல்லுநர்கள், சாதனம் மற்றும் நெட்வொர்க் உற்பத்தியாளர்கள் ஆகியோர் உரையாற்றுகின்றனர். இந்தக் கருத்தரங்கில் 100 க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச பங்கேற்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.