மத்திய பட்ஜெட் தயாரிப்பில் மரபாக பின்பற்றப்படும் அல்வா நிகழ்ச்சியை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். அது என்ன நிதியமைச்சர் அல்வா வழங்கும் நிகழ்ச்சி, ஏன், எதற்கு நடைபெறுகிறது என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.



மத்திய பட்ஜெட்:


அடுத்த ஒரு கால ஆண்டுக்கு எவ்வளவு வருமானம் வரும் எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பது குறித்தான அறிக்கையே பட்ஜெட் ஆகும். சில தருணங்களில் நீண்ட காலத்திற்கான திட்டத்துக்கும் நிதி ஒதுக்கப்படும்.


2023 ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்ட தொடரானது பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பிப்ரவரி 1 ஆம் தேதி 2023- 24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா தாக்கல் செய்யவுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான 5 வருட ஆட்சியின் கடைசி முழு பட்ஜெட்டாகும். அடுத்த வருடம் தேர்தல் நடைபெறவுள்ளதால் இடைக்காலத்துக்கான பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பது விதியாகும்.


ஏன் அல்வா:


பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பு, பட்ஜெட் தொடர்பான ஆவணங்களை தயாரிக்கும் இறுதி கட்ட பணி நடைபெறும். மத்திய பட்ஜெட் தொடர்பான ஆவணங்களை அச்சிடும் தொடக்கத்தை குறிக்கும் வகையில் நிதி அமைச்சகத்தில் 'அல்வா விழா' நடைபெறும். கடந்த 2021- 22 பட்ஜெட் முதல் டிஜிட்டல் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. ஆகையால் டிஜிட்டல் முறையில் ஆவணங்கள் பதிவேற்றம் நடைபெறும். 


அப்போது தயாரிப்பில் ஈடுபடும் அதிகாரிகள் யாரும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை வெளி உலகத்தோடு தொடர்பு கொள்ள கூடாது. ஏனென்றால், பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்பே, தகவல் கசிந்து விடக்கூடாது என்பதற்காக.




இந்நிகழ்வானது, மத்திய அரசு அலுவலகத்தின் நார்த் ப்ளாக்கில் நடைபெறும். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகே, அதிகாரிகள் அறையை விட்டு வெளியே வருவார்கள்.அதுவரை ரகசியம் காக்கப்படும். ஆனால் நிதியமைச்சருக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படுகிறது.


ALSO READ | Budget Interesting Facts: மத்திய பட்ஜெட்டின் வரலாற்று சிறப்பம்சங்கள்... பலர் அறிந்திராத தகவல்கள்... இதோ..!


ஆகையால், இத்தகைய சிரமமான காரியத்தை மேற்கொள்ளும் அவர்களுக்கு, மகிழ்ச்சியுடன் வேலையை தொடங்க, இனிப்புடன் பணியை தொடங்குவதற்கான அல்வா வழங்கும் நிகச்சியை நிதியமைச்சர் நடத்துவார். 


இந்நிலையில் 2023-24 ஆம் ஆண்டுக்கன மத்திய பட்ஜெட் தயாரிப்பில் அல்வா நிகழ்ச்சியை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று புதன்கிழமை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், நிதி அமைச்சகத்தின் அதிகாரிகளுக்கு அல்வாவை நிதி அமைச்சர் வழங்கினார்.




இந்நிகழ்வில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் டாக்டர் பகவத் கிஷன்ராவ் கரத், நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு, கொரோனா தொற்று காரணமாக அல்வா நிகழ்ச்சி நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தகது.


Also Read: நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கைகள்... ஒரு பார்வை..!...