தமிழ்நாடு:



  • ’நம்ம ஸ்கூல்’ திட்டம் தொடக்கம்- அரசுப்பள்ளிகளை முன்னாள் மாணவர்கள் மேம்படுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.

  • கோவை அன்னூர் பகுதியில் தொழிற்பூங்கா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்த விவசாயிகளை நேரில் சந்தித்து எம்.பி. ஆர். ராசா பேச்சுவார்த்தை நடத்தினார்.

  • சென்னை மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள சாலை மற்றும் தெருக்களுக்கான பெயர்ப்பல்கை ஆகியவற்றை மறைக்கும் வகையில் பொது இடங்களில் சுவரோட்டிகள் ஒட்டக் கூடாது என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

  • அரசியலில் தனித்து நிற்பதை விட தாக்கு பிடித்து நிற்பது தான் பெரிது- திருமாவளவன் எம்.பி.

  • சபரிமலை கோயிலில் கடந்த 31 நாட்களில் 20,18,351 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

  • தான் அறிவித்ததை விட ஒரு பைசா அதிகமாக சொத்து வைத்திருப்பதாக தி.மு.க.வினர் நிரூபித்தால், சொத்துக்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க தயார் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  • அடுத்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு ரூ.110 கோடிக்கு ஆவின் பொருட்களை விற்பனை செய்ய இலக்கு -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாசர் இல்ல திருமண விழாவில் பேச்சு

  • பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ரோப்காரில் சென்றபோது ஏற்பட்ட மின்தடையால் ரோப்கார்  பாதியில் அந்தரத்தில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

  • மக்களை சந்திப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

  • சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை பார்வையிட அனுமதிப்பது குறித்து அதிகாரிகளுடன் வல்லுனர் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

  • திருமழிசை புதிய பஸ் நிலையம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் சேகர்பாபு தகவல்

  • அடுத்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு ரூ.110 கோடிக்கு ஆவின் பொருட்களை விற்பனை செய்ய இலக்கு -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாசர் இல்ல திருமண விழாவில் பேச்சு


இந்தியா: 



  • ஐ.எம்.எஸ். மர்மகோவா போர்கப்பல் இந்திய கப்பல்படையில் இணைந்தது. 

  • ராகுல் காந்தி முன்னெடுத்திருக்கும் இந்திய தேசிய ஒற்றுமை யாத்திரையில்  (பாரத் ஜடோ யாத்ரா) மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளார். 

  • குடிமைப்பணி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல்

  • சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை (டிசம்பர் 19 ) ஆன்லைன் தரிசனம் இல்லை என தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

  • இந்திய நாட்டுக்கு தேவையான உணவு தாணியம் கையிருப்பில் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  • கொல்கத்தாவில் அமித்ஷா தலைமையில் கிழக்கு பிராந்திய கவுன்சில் கூட்டம்; மம்தா பானர்ஜி பங்கேற்பு

  • பல்கலைக்கழங்களில் வேந்தராக இருக்கும் ஆளுநரை நீக்கவேண்டி கேரள சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

  • சபரிமலை ஐயப்பன் கோயிலில் 18-ம் படி வழியாக நிமிடத்திற்கு 80 பக்தர்கள் செல்ல ஏற்பாடு

  • பிரான்ஸின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்ட ரஃபேல் போர் விமானத்தின் 36வது போர்விமானம் நேற்று இந்தியா வந்து சேர்ந்தது.


உலகம்:



  • சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று - ஷாங்காயில் பள்ளிகளை மூட கல்வித் துறை உத்தரவு. அடுத்த மாதம் கல்வி ஆண்டு முடியும் வரை ஆன்லைனில் பாடம் நடத்த உத்தரவு

  • கோலாலம்பூர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு - 9 பேர் மாயம்

  • பாகிஸ்தானின் பிரச்சினைகளுக்கு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் மட்டுமே தீர்வு- இம்ரான் கான்

  • உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 63.12 கோடியாக உயர்வு

  • சிறுகோளின் 10 லட்சம் கிலோ பாறைகள், தூசுகள் விண்ணில் வெளியேற்றம் - நாசா அமைப்பு

  • பருவநிலை மாற்றம் எதிரொலியால் 30 நாடுகளில் காலரா பரவல் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை


விளையாட்டு:



  • ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: மகுடம் சூடப்போவது யார்? அர்ஜெண்டினா - பிரான்ஸ் அணி மோதும் போட்டி இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது.

  • வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

  • ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இரண்டே நாட்களில் முடிவுக்கு வந்தது.

  • பிரிஸ்பேனில் நடந்த டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கத்தால் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

  • புரோ கபடி: புனே அணியை வீழ்த்தி 2வது முறையாக சாம்பினம் பட்டம் வென்றது ஜெய்ப்பூர்.

  • பார்வையற்றோருக்கான டி20 உலகக்கோப்பை: 3வது முறையாக வென்ற இந்திய அணி.