பயண கட்டணம் தொடர்பாக ஆட்டோ டிரைவர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் பிரச்னை எழுவது தொடர் கதையாகி வரும் நிலையில், இந்த பிரச்னைகளை தீர்க்க Uber நிறுவனம் புதிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, ஆட்டோ டிரைவர்களுக்கு பணம் கொடுக்கும்போது, டிஜிட்டல் பேமெண்ட் முறையை பயன்படுத்த முடியாது என Uber தெரிவித்துள்ளது. அதோடு, பயணத்திற்கான கட்டணத்தை Uber இனி பரிந்துரை மட்டுமே செய்யும் என்றும் ஆனால் கட்டணம் தொடர்பான இறுதி முடிவை வாடிக்கையாளர், ஆட்டோ டிரைவர் ஆகியோர் இருவரும் இணைந்து கலந்தாலோசித்து எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பல்வேறு நகரங்களில் ஓலா, ஊபர், ரேபிடோ நிறுவனங்களுடன் ஒப்பந்தம் அடிப்படையில் ஆயிரக்கணக்கானோர் கால் டாக்ஸி சேவை வழங்கி வருகின்றனர். சென்னை உள்பட நாடு முழுவதும் பல்வேறு நகரகளில் வாடகை ஆட்டோ, கார், பைக் என அனைத்தும் இயங்கி வருகிறது. ஆன்லைன் செயலி மூலமாக முன்பதிவு செய்தால் நினைத்த இடத்தில் இருந்து நினைத்து இடத்தில் சென்றடைய முடியும்.
மெட்ரோ நகரங்களாக இருக்கும் பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் ஊபர், ஒலா போன்ற நிறுவனங்களின் சேவையை பயன்படுத்தி வாடகை கார்கள், ஆட்டோக்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர்.
இப்படியிருக்க, கட்டணம் தொடர்பாக ஆட்டோ டிரைவர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் பிரச்னை எழுவது வழக்கமாகி வருகிறது. இந்த பிரச்னைகளை தீர்க்க Uber நிறுவனம் புதிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, ஆட்டோ டிரைவர்களுக்கு பணம் கொடுக்கும்போது, டிஜிட்டல் பேமெண்ட் முறையை பயன்படுத்த முடியாது என Uber தெரிவித்துள்ளது.
அதாவது, Uber credits and promotionsஐ பயன்படுத்த முடியாது. அதற்கு பதில், டிரைவரிடம் பணத்தை நேரடியாக கொடுக்கலாம் அல்லது UPI (கூகுள் பே, போன் பே) மூலம் பணத்தை கொடுக்கும் வகையில் விதிகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதோடு, பயணத்திற்கான கட்டணத்தை Uber இனி பரிந்துரை மட்டுமே செய்யும். ஆனால், கட்டணம் தொடர்பான இறுதி முடிவை வாடிக்கையாளர், ஆட்டோ டிரைவர் ஆகியோர் இருவரும் இணைந்து கலந்தாலோசித்து எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, எந்த விதமான cancellation chargeகளும் வசூலிக்கப்படாது.
ஆட்டோ டிரைவரிடம் இருந்து இனி, Uber தரப்பில் எந்த விதமான கட்டணமும் வசூலிக்கப்படாது.
இனி, டிரைவர்கள் சுயாதீனமாக இயங்குவார்கள். மேலும், Uberஇன் பங்கு என்பது பயணிகளை ஓட்டுநர்களுடன் இணைப்பதில் மட்டுமே இருக்கும்.