Watch Video: உத்தரபிரதேசத்தில் ஒரே நபரை விரும்பியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து, பள்ளி மாணவிகள் இருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
சாலையில் அடித்துக் கொண்ட மாணவிகள்:
உத்தரபிரதேச மாநிலம் பாக்பத்தில் இரண்டு இளம்பெண்கள் இருவரும், தங்கள் பள்ளியில் ஒரே நபரை விரும்பும் விவகாரத்தில் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். மக்கள் நடமாட்டம் நிலவிய பரபரப்பான சாலையில் அவர்கள் ஒருவரையொருவர் குத்தினார்கள், உதைத்தனர், மேலும் ஒருவரையொருவர் முடியைப் பிடித்து இழுத்துக்கொண்டனர். சிங்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அமிநகர் சராய் நகரில் செவ்வாய்க்கிழமை இச்சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோக்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. விரிவான விசாரணையும் நடந்து வருகிறது.
வீடியோ வைரல்:
வீடியோக்களில், பள்ளி சீருடை அணிந்த பதின்ம வயதினர் ஒருவரையொருவர் குத்துவதும், உதைப்பதும், தலைமுடியால் இழுப்பதும் காணப்பட்டது, அதே நேரத்தில் மற்ற மாணவர்களும் வழிப்போக்கர்களும் சண்டையைத் தீர்க்க அவர்களைப் பிரித்துவிட முயன்றனர். ஆனால், அதையும் மீறி இரண்டு மாணவிகளும் கட்டுக்கடங்காமல், ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்ட” காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
நடந்தது என்ன?
சம்பவம் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களின்படி, ”சிறுமிகள் இருவரும் அப்பகுதியில் உள்ள உள்ளூர் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வருகின்றனர். அதே பள்ளியில் படித்த ஒரு பையனை அவர்கள் விரும்புவதாக கூறப்படுகிறது. இருவரும் பையனுடன் அடிக்கடி பேசி, இருவருக்கும் பிடிக்கும் என்று தெரிந்ததும் பள்ளிக்கு வெளியே சண்டை போட்டுள்ளனர். "வீடியோ ஆய்வு செய்யப்பட்டு வருகிறது, அதன்படி இந்த விவகாரம் விசாரிக்கப்படும்" என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தராகண்டில் மற்றொரு சம்பவம்:
இதேபோன்ற மற்றொரு சம்பவத்தில், உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் காதலன் பிரச்சினையில் தகராறு செய்து இரண்டு பெண்கள் சண்டையிட்டனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது மற்றும் இரண்டு சிறுமிகளும் பரஸ்பரம் சாலையில் ஒருவரையொருவர் இழுத்து பிடித்து தாக்கிக்கொண்டனர்.
அருகில் இருந்தவர்கள் சண்டையை நிறுத்த முயன்றனர், ஆனால் அவர்களை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. சண்டை மேலும் தீவிரமடைந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர் மற்றும் சமூக ஊடக பயனர்கள் சிறுமிகளுக்கு எதிராக பதிவு செய்யப்படும் குற்றச்சாட்டுகளின் தன்மை குறித்து கேள்வி எழுப்பினர். இந்த வீடியோ சமூக ஊடக பயனர்களிடமிருந்து கலவையான எதிர்வினைகளைப் பெற்றது, சிலர் அதை வெட்கக்கேடானது என்று கருதினர், சிலர் அதை பொழுதுபோக்காகப் பார்த்தார்கள்.