பஞ்சாப் பாடகர் சித்து முஸ்வாலா கடந்த மே மாதம் 29 தேதி துப்பாகியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை பிடித்த டெல்லி போலிசார், அவர்களிடமிருந்து பயங்கரமான ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர்.
பஞ்சாப் பாடகர் சித்து முஸ்வாலா கடந்த மாதம் காரில் சென்று கொண்டிருந்தபோது துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்பு, அரசு தரப்பிலிருந்து வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. இப்படியான கொலை வழக்கு இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையினை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட பாடகர் சித்து முஸ்வாலா
உடலில் 25 குண்டுகள்
கொலை செய்யப்பட்ட முஸ்வாலாவின் உடலில் 25 குண்டுகள் பாய்ந்துள்ளது என உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். மேலும் அவரது உடலில் துப்பாக்கி குண்டு பவுடரும் உள்ளதாக குறிப்பிட்டிருந்தனர். இவ்வளவு மோசமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
ஆயுதங்கள் பறிமுதல்
இவரது கொலை சம்பந்தமாக, லாரன்ஸ் பிஷ்னோய் என்பவரது கும்பல் தாமாக முன்வந்து பொறுப்பேற்றுக் கொண்டது. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களை போலீஸார் கைது செய்தனர். கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து, கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட மூன்று துப்பாக்கிகள், 50 துப்பாக்கிக் குண்டுகள் மற்றும் எட்டு கையெறி குண்டுகளை டெல்லி போலிசார் கைப்பற்றியுள்ளனர்.
அரசியல் கொலை
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி அகாலி தளம் கட்சியின் இளைஞரணித் தலைவர் விக்ரம் ஜித் சிங் என்ற விக்கி மிட்டுகேராவைக் கொன்றதில் மூஸ் வாலாவுக்கு தொடர்பு இருப்பதாகவும், சித்துவின் கொலை அதற்கான பழிவாங்கல் நடவடிக்கையே என்றும் பிஷ்னோய் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்