டெல்லியில் நீதிமன்ற வளாகத்திலே பாதுகாப்பு வீரர் தவறுதலாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


டெல்லியில் அமைந்துள்ளது ரோகினி நீதிமன்ற வளாகம். இந்த வளாகத்தின் நுழைவுவாயிலில் இன்று திடீரென இரண்டு வக்கீல்கள் இணைந்து அங்கிருந்த ஒரு நபருடன் சண்டையிட்டனர். அப்போது, அந்த சண்டையை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் தடுக்க முயன்றனர். அப்போது, எதிர்பாராதவிதமாக பணியில் இருந்த ஒரு காவல்துறையினரின் துப்பாக்கி சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.




இன்று காலை 9.40 மணிக்கு நீதிமன்ற வளாகத்தில் சஞ்சீவ் சவுத்ரி மற்றும் ரிஷி சோப்ரா ஆகிய இரு வழக்கறிஞர்களும் வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த ரோகித்பெரி என்ற நபர் இருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, வழக்கறிஞர்கள் இருவரும் அந்த நபரை தாக்கிக்கொண்ட கேட் எண் 8-ன் வழியே வெளியே ஓடிக்கொண்டு வந்தனர்.






அப்போது, அங்கே நாகலாந்து ஆயுதப்படை போலீசார் உள்பட பல்வேறு பிரிவு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். நாகலாந்து போலீசார் படையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் இவர்களது சண்டையை தடுக்க முயன்றார். அப்போது, சக காவலர்களும் இந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வர முயற்சித்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக அந்த நாகலாந்து காவலர் துப்பாக்கியை தவறுதலாக தரையை நோக்கி சுட்டுவிட்டார். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தரையை நோக்கி பாய்ந்த குண்டு இரு காவலர்களின் கால்களை உரசிச் சென்றது.


காயமடைந்த நபர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண