கேரளாவில் அமைந்துள்ளது வயநாடு. அந்த மாநிலத்தின் புகழ்பெற்ற சுற்றுலா நகரமாக திகழும் வயநாட்டில் நேற்று நள்ளிரவில் 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த இந்த துயரச்சம்பவத்தால் ஒட்டுமொத்த கேரளமும் சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்த துயர சம்பவத்தால் மொத்தம் 54 பேர் பரிதாபமாக இதுவரை உயிரிழந்துள்ளனர். இப்பேரிடரை எதிர்கொள்ள கேரள அரசிற்கு 5 கோடி நிதி வழங்குவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்


தவெக தலைவர் விஜய் வருத்தம்






வயநாடு ஏற்பட்ட நிலச்சரிவு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்காக தான் பிரார்த்திப்பதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் பதிவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை மீட்க அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என்றும் விஜய் வேண்டுகோள் வைத்துள்ளார். 


தொடர் பேரிடர்களை சந்தித்து வரும் கேரளம்


தொடர்ச்சியான மாபெரும் பேரிடர்களை எதிர்கொண்டு வருகிறது கேரளா. 2018 பெருவெள்ளம் 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவுக்கு  பின் கேரளத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இயற்கை பேரிடராக வயநாடு நிலச்சரிவு கருதப்படுகிறது. தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக ஜூலை 30 ஆம் தேதி அதிகாலை இரண்டு மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் பின் 4: 10 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலச்சரிவில் 500  வீடுகள் , பாலங்கள் , சாலைகள் பாதிக்கப் பட்டுள்ளன. தேசிய மீடுபு படையினர் உட்பட பல்வேறு மீட்புக் குழுக்கள் நிலச்சரிவில் மாட்டிக் கொண்ட மக்களை மீட்க போராடி வருகிறார்கள். மரங்கள் சாலையை மறித்து விழுந்திருப்பதாலும் , மின்சாரம் துண்டிக்கப் பட்டிருப்பதாலும் சம்ப இடத்திற்கு சென்று மீட்கும் பணிகளில் சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள் மீட்பு படையினர். 


காலநிலை மாற்றத்தால் உந்தப் பட்ட அதிகப்படியா மழை, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் நிகழும் வரைமுறையற்ற நிலப்பயன்பாடு மற்றும் கட்டுமான பணிகளே இந்த நிலச்சரிவிற்கு காரணம் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளார். வயநாடு நிலச்சரிவை விசாரிக்க தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்துள்ளது