ரகு​வின்தே ஸ்வந்​தம் ரசி​யா மலை​யாள திரைப்​படத்​தின் மூலம் 2011-ம் ஆண்டு நடிகை​யாக அறி​முக​மானவர் லட்​சுமி மேனன். பின்​னர் இவர் தமிழில் சுந்​தர​பாண்​டியன் (2021), கும்கி (2012) போன்ற படங்​களில் நடித்ததன் மூல​மாக பிரபலமானார். லட்​சுமி மேனன் சென்ற மாதம் 24ம் தேதி தனது தோழி உட்பட மூன்று பேருடன் கொச்​சி​யில் உள்ள மது​பான பாருக்கு சென்​றுள்​ளார். அப்​போது, அங்​கு, மது அருந்த வந்த ஆலப்​புழாவைச் சேர்ந்த ஐடி ஊழியர் அலி​யார் ஷா சலீம் என்​பவருக்​கும், லட்​சுமி மேனன் தரப்​பினருக்​கும் இடையே தகராறு ஏற்​பட்​டுள்​ளது.

Continues below advertisement

பின்​னர் இருதரப்​பினரும் வெளியே வந்​தும் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டுள்​ளனர். அலி​யார் ஷா சலீம் தனது காரில் புறப்​பட்டபோது அவரை பின்​தொடர்ந்து சென்ற லட்​சுமி மேனன் உள்​ளிட்ட நான்கு பேரும் இடை​யில் வழிமறித்து மீண்​டும் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டுள்​ளனர். அப்​போது, ஐடி ஊழியரை காரிலிருந்து வெளியே இழுத்து லட்​சுமி மேனன் தரப்​பினர் தங்​களது காரில் கடத்தி சென்று கடுமை​யாக தாக்கி ஓரிடத்​தில் இறக்​கி​விட்​டுச் சென்​றுள்​ளனர். இதுகுறித்து எர்​ணாகுளம் வடக்கு காவல் நிலை​யத்​தில் அலி​யார் ஷா சலீம் புகார் அளித்​ததைத்தொடர்ந்து போலீ​ஸார் லட்​சுமி மேனன் மற்​றும் அவரது நண்​பர்​கள் அனீஸ், மிதுன், சோ​னாமோல் ஆகிய 4 பேர் மீதும் ஆட்​கடத்​தல், மிரட்​டு​தல் உள்​ளிட்ட பல்​வேறு பிரிவு​களின் கீழ் வழக்​குப்​ ப​திவு செய்​தனர். நடிகை லட்​சுமி மேனன் தவிர 3 பேரை​யும் போலீ​ஸார் ஏற்​கெனவே கைது செய்​தனர்.

Continues below advertisement

இதற்​கிடையே, லட்​சுமி மேனன் மற்​றும் ஐடி ஊழியர் இடையே​யான தகராறு வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலானது. இதையடுத்​து, முன்​ஜாமீன் கோரி லட்​சுமி மேனன் கேரள உயர் நீதி​மன்​றத்​தில் மனுத்​தாக்​கல் செய்​தார். அதில், ஐடி ஊழியர் தன்னை ஆபாச வார்த்​தைகளால் திட்​டி, பாலியல் ரீதி​யாக துன்​புறுத்​தி​ய​தாக​வும், பாரை விட்டு வெளிய வந்த பின்​னரும் பீர் பாட்​டிலால் தாக்​கிய​தாக​வும் தெரி​வித்​துள்​ளார். ஐடி ஊழியரை நான் தாக்​கிய​தாக அளித்த புகார் ஜோடிக்​கப்​பட்​டது. எனக்​கும் இந்த குற்​றத்​துக்​கும் சம்​பந்​தமில்லை என்று தெரி​வித்​துள்​ளார்.

இவரது மனுவை விசா​ரித்த நீதிபதி பெச்சு குரியன் தாமஸ், செப்​டம்​பர் 17-ம் தேதி வரை நடிகை லட்​சுமி மேனனை கைது செய்​வதற்கு தடை வி​தித்​தார். மேலும், இந்த வழக்கு தொடர்​பான கூடு​தல் விவரங்​களை தாக்​கல் செய்​யு​மாறு போலீ​ஸாருக்​கு நீதிப​தி உத்​தர​விட்​டார்​. தன் மீதான ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகை லட்சுமி மேனன் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மதுபான பாரில் நடந்த தகராறில் இளைஞர் ஒருவரை கடத்தி தாக்கியதாக நடிகை லட்சுமி மேனன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இரு தரப்பினரும் சுமுகமாக பிரச்சனையை பேசி தீர்த்துக் கொண்டதால் முன் ஜாமின் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு நவம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து வழக்கு நடந்த விசாரணையின் போது சமாதான பேச்சுவார்த்தை மூலம் இந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டதாக நடிகை லட்சுமி மேனன், ஐ.டி. ஊழியர் ஆகிய 2 பேரும்  நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதை பரிசீலித்த நீதிபதி டயஸ் தலைமையிலான அமர்வு, நடிகை லட்சுமி மேனன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.