தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்துவிட்டது. சவரன் ஒரு லட்சம் ரூபாய்க்கு சென்றுவிடும் என்ற நிலை உள்ளது. இந்த சூழலில், டிஜிட்டல் தங்க முதலீடும் தற்போது அதிகரித்து வருகிறது. ஆனால், அதில் ஆபத்துகள் உள்ளதாகவும், டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கிறது இந்திய பத்திரங்கள் மற்றும் பங்கு பரிவர்த்தனை வரியம். இது குறித்த செபியின்(SEBI) அறிக்கை என்ன கூறுகிறது என்பதை தற்போது பார்க்கலாம்.

Continues below advertisement

விலை உயர்வால் அதிகரிக்கும் தங்கத்தின் மீதான முதலீடு

சமீப காலமாக, ஆபரணத் தங்கத்தின் விலை நடுத்தர மக்களுக்கு எட்டாக் கனியாக மாறிக்கொண்டிருக்கிறது. கிடுகிடுவென உயர்ந்த தங்கத்தின் வலை, சவரனுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை சென்றுவிடும் என்று தான் தோன்றுகிறது. அந்த அளவிற்கு, நாளுக்கு நாள், அதிலும் ஒரே நாளில் இரண்டு முறை என, தாறுமாறாக தங்கத்தின் விலை எகிறி வருகிறது.

இது ஒருபுறமிருக்க, வசதி படைத்தவர்கள் தங்கத்தில் முதலீடு செய்யும் நிலையும் அதிகரித்து வருகிறது. இப்போதே தங்கத்தை வாங்கி சேர்த்தால், பின்னாளில் அதிக லாபம் கிடைக்கும் என்பதே அவர்களின் எண்ணமாக உள்ளது. அதிலும் தற்போது, டிஜிட்டல் முறையில் தங்கம் வாங்கும் போக்கும் அதிகரித்து வருகிறது. பல்வேறு ஆன்லைன் வணிக தளங்கள், பண பரிவர்த்தனை நிறுவனங்கள் மூலமாக, டிஜிட்டல் தங்கம் விற்கப்படுகிறது.

Continues below advertisement

இந்நிலையில், டிஜிட்டல் தங்க முதலீட்டில் கனவமாக இருக்குமாறு வலியுறுத்தி, இந்திய பத்திரங்கள் மற்றும் பங்கு பரிவர்த்தனை வாரியமான செபி, ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

செபியின் எச்சரிக்கை என்ன.?

செபியின் அந்த அறிக்கையில், டிஜிட்டல் தங்கம் முதலீட்டில் வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈ.டி.எஃப் தங்க பத்திரங்கள், பரஸ்பர நிதி முதலீடுகள்(மியூச்சுவல் பண்டுகள்) போன்ற ஒழுங்குப்படுத்தப்பட்ட தயாரிப்புகள் மூலம் முதலீடு செய்யப்படும் தங்கத்திற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பாதுகாப்பு அளிக்கின்றன.

சில ஆன்லைன் தளங்கள், முதலீட்டாளர்களுக்கு டிஜிட்டல் தங்கம் என்ற பெயரில் முதலீடு செய்ய வாய்ப்பளிக்கின்றன. இவை வழக்கமான தங்கத்திற்கு மாற்றாக சந்தைப்படுத்தப்படுகின்றன. ஆனால் டிஜிட்டல் தங்கம் மற்றும் இ-தங்க பத்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கு எவ்வித பாதுகாப்பு வழிமுறைகளும் கிடையாது” என கூறப்பட்டுள்ளது.

இன்றைய டிஜிட்டல் உலகில், ஆன்லைனில் எத்தனையோ மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அதேபோல், டிஜிட்டல் தங்கத்திலும் நடக்க வாய்ப்புகள் இல்லாமல் இல்லை. அதனால் தான், செபி இத்தகைய எச்சரிக்கையை வாடிக்கையாளர்களுக்கு விடுத்துள்ளது. இதை பார்த்து, மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதே அதன் நோக்கமாகும்.