திரிபுரா மாநிலத்தின் முதல்வராக பொறுப்பு வகித்தவர் பிப்லப்குமார் தேப். அந்த மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திரிபுரா முதலமைச்சர் பிப்லப்குமார் தேப் திடீர் ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை அந்த மாநில ஆளுநரிடம் வழங்கியுள்ளார். இந்த நிலையில், திரிபுராவின் புதிய முதல்வர் யார் என்று இன்று அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிப்லப்குமார் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Biplab Kumar Deb Resignation : நேற்று அமித்ஷாவுடன் சந்திப்பு! இன்று திரிபுரா முதலமைச்சர் திடீர் ராஜினாமா...! காரணம் என்ன?
சுகுமாறன் | 14 May 2022 04:29 PM (IST)
பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் திரிபுரா முதல்வர் பிப்லப்குமார் தேப் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுரா முதல்வர் பிப்லப்குமார் தேப்