பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள முக்கியமான நகரங்களில் ஒன்று அமிர்தசரஸ். இங்கு குருநானக்தேவ் மருத்துவமனை அமைந்துள்ளது. அந்த பகுதியில் மிகப்பெரிய மருத்துவமனையான இங்கு தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க அந்த மாநில தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர். தீ பெரியளவில் பரவும் முன்னரே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 650 நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. தீயணைப்புத்துறை அதிகாரி லவ்ப்ரீத் சிங் கூறியபோது, எட்டு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்