மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் கார்கே பேசும்போது மைக்கை அணைத்ததற்கு திருச்சி சிவா கண்டனம் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து கேள்வி எழுப்பிய அவர், “ கார்கே பேசும்போது ஏன் மைக் அணைக்கப்பட்டது. யார் உத்தரவிட்டு மைக் அணைக்கப்பட்டது. மைக் அணைப்பது போன்ற நடவடிக்கை எப்போதும் நடந்ததில்லை.” என்றார்.


இதை தொடர்ந்து கார்கே பேசும்போது மைக் அணைக்கப்படவில்லை என்று மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்கர் விளக்கம் அளித்தார். ஜெகதீப் தங்கர் விளக்கத்தை ஏற்க மறுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதனால் மக்களவை மதியம் 12 மணிவரை முடங்கியது.  


எம்.பி திருச்சி சிவாயை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் கார்கேவும் தான் பேசும்போது மைக் அணைக்கப்பட்டதாக குற்றச்சாட்டை முன்வைத்தார். அதில், அவையில் பேசியபோது தனது மைக் அணைக்கப்பட்டது தனக்கு நேர்ந்த அவமானம் என கார்கே குறிப்பிட்டார். 


அவையில் பேசியபோது தனது மைக் அணைக்கப்பட்டது தனக்கு நேர்ந்த அவமானம். 


எதிர்க்கட்சிகள் அமளி - இரு அவைகளும் ஒத்தி வைப்பு: 


எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 12 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். 


அதாவது 267 சட்டத்தின் கீழ் நாள் முழுவதும் விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி,க்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் அமளிக்கு நடுவே தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களும் ‘மோடி மோடி’ என்று முழங்கினர். இதனால் இரு அவைகளும் முடங்கியது.