ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் இறங்குமிடத்தை தவற விடும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதால் அதற்கு தீர்வு கட்ட ஐஆர்சிடிசி மிக தீவிரமான முயற்சி மேற்கொண்டு வருகிறது. 


ஐஆர்சிடிசி எனப்படும் இந்திய ரயில்வேயின் கீழ் பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் என ஆயிரக்கணக்கான ரயில்கள் இந்தியா முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன. இத்தைகைய ரயில்கள் மூலம் லட்சக்கணக்கான பயணிகள் தங்கள் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பெரும்பாலும் இரவு நேர பயணங்களை விரும்பும் பயணிகள் அதிகளவில் உள்ளதால் அவர்களின் எண்ணங்களை கருத்தில் கொண்டு மாலை, இரவு நேரங்களில் அதிக ரயில்களை ரயில்வே துறை இயக்கி வருகிறது. 


ஆனால் இரவு நேரங்களில் பயணிகள் தூங்குவதால் பல நேரங்களில் தாங்கள் இறங்கும் ரயில் நிலையங்களை தவற விடுவது அடிக்கடி நடைபெறுவது ஒன்று. அதுவும் தனியாக செல்பவர்கள் நிலைமை இன்னும் மோசம் தான். இதனை தவிர்க்க ஐஆர்சிடிசி எவ்வளவோ முயற்சி எடுத்தும் பிரச்சினை தீர்வதாக இல்லை. இது தொடர்பாக ரயிலில் பயணிக்கும் பொதுமக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு ஏற்படவில்லை என்பதே உண்மை. 


ஏற்கனவே இந்திய ரயில்வே துறையை கட்டமைக்கும் நோக்கத்தோடு புதிய திட்டங்களை கையில் எடுத்துள்ள மத்திய அரசு மீண்டும் ரயில் நிலையங்களை தவற விடுவது தொடர்பான திட்டத்தில் அதிக கவனம் செலுத்தியுள்ளது. இதற்காக “139” என்ற எண்ணை பயணிகள் அழைக்கலாம். அதில் குறிப்பிட்டுள்ள தகவல்களை அளித்தால் நீங்கள் இறங்கும் ரயில் நிலையங்கள் வருவதற்கு 20 நிமிடங்கள் முன்னால் உங்களை தூக்கத்தில் இருந்து எழுப்பும் வகையில் எச்சரிக்கை அழைப்பு வரும். 


இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரை பயணிக்கும் ரயில் பயணிகளுக்கு இந்த வசதி உள்ளது என்றும், இதன்மூலம் பயணிகள் இந்த சேவைக்கு இன்டர்நெட் சேவை தொடர்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த சேவையை எப்படி பெறலாம்? 



  •  உங்கள் மொபைல் எண்ணிலிருந்து '139' ஐ டயல் செய்யுங்கள்.

  • கிடைக்கக்கூடிய ஆப்ஷன்களில் இருந்து விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

  • அதன்பிறகு கூறப்படும் மெனுவிலிருந்து '7' என்ற எண்ணை கிளிக் செய்யவும்.

  • விழிப்பு அழைப்பு  எச்சரிக்கையை பெற நீங்கள் '2' விருப்ப எண்ணை அழுத்த வேண்டும்.

  • இப்போது உங்கள் ​​ரயில் டிக்கெட்டின் 10 இலக்க PNR எண்ணை உள்ளிடவும்.

  • உங்கள் PNR எண்ணை உறுதிப்படுத்த '1' ஐ அழுத்தவும்

  • இந்த சேவையை செயல்படுத்துவதற்கான உறுதிப்படுத்தல் குறுந்தகவல் உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண