ஆடம்பர பொருள்களை பயன்படுத்துவது உங்களது வழக்கமாக இருந்து அதில் குளிப்பதே உங்களது வாழ்க்கை முறையாக இருந்தால் அப்போது உங்களுக்கான இடம் பலென்சியாகா என்ற ஃபேஷன் நிறுவனம்தான். 


 






நீங்கள் எடுத்துச் செல்லும் குப்பைப் பையில் கூட விலை பட்டியல் இணைக்கப்பட்டிருக்கும். இந்த நிறுவனம், குப்பைப் பைகளை ரூ. 1.4 லட்சத்திற்கு (அமெரிக்க டாலர் 1,790) விற்பனை செய்கிறது. சரி, இந்த குப்பைப் பை எதனால் ஆனது என்று உங்களில் பெரும்பாலோர் யோசித்துக்கொண்டிருக்கலாம்.


பலென்சியாகா நிறுவனம் தயாரிக்கும் குப்பை பைகள், 'trash pouch' என அழைக்கப்படுகிறது. இது பளபளப்பான கன்று தோலிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் மஞ்சள் உள்ளிட்ட நான்கு வெவ்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது. இணைப்புகளை சரிசெய்யும் முன் அவற்றை மூடுவதற்கு இழுக்கக்கூடிய டிராஸ்ட்ரிங்ஸ் உள்ளது.


பலென்சியாகாவின் மழைக்காலம் 22 கலெக்சன் ஃபேஷன் ஷோவில் வெளியிடப்பட்ட இந்த பை இணையத்தில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. சில ஆடம்பரப் பிரியர்கள், டிசைனர் தயாரித்த இந்த பைகளை வாங்க எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தாலும், இதன் விலை மற்றவர்களை திகைப்படைய வைத்துள்ளது. குற்றம் சொல்ல முடியாது, ஒரு குப்பைப் பைக்கு ஏன் இவ்வளவு பெரிய தொகையை ஒருவர் செலுத்த வேண்டும்?


பையின் விலை குறித்து கலாய்க்கும் வகையில் ட்விட்டரில் மீம்ஸ்கள் வெளியாகியுள்ளன. பெரும்பாலான ட்விட்டர் பயனர்கள், இதன் விலையால் அதிர்ச்சி கலந்து கோபத்திற்கு உள்ளாகியுள்ளனர். 


"குப்பைப் பையைப் போல தோற்றமளிக்கும் #Balenciaga ஆடம்பர பொருளுக்கு $1,790 செலவழிக்க உங்களால் முடிந்தால், அதில் பணத்தை நிரப்பி உங்கள் அருகிலுள்ள தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்குவதற்கு வங்கியில் போதுமான பணம் இருக்க வேண்டும்" என்று ஒரு பயனர் குறிப்பிட்டுள்ளார்.


மற்றொரு பயனர், "$1,700 செலவழித்து நீங்கள் பலென்சியாகா குப்பைப் பையுடன் சுற்றித் திரிந்தால், உங்களைக் கொள்ளையடிக்க எனக்குத் தெரிந்த சில ஆட்களை அனுப்புவேன்" என பதிவிட்டுள்ளார்.


சர்ச்சைக்குரிய ஆடம்பர பொருட்களுக்கு பெயர் போன பலென்சியாகா, மே 2022 இல், ரூ. 2 லட்சத்திற்கு (அமெரிக்க $2,590) ‘குப்பைத் தொட்டி’ காலணிகளை விற்பனை செய்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண