ஆந்திராவில் அமைந்துள்ளது விஜயநகரம் மாவட்டம். இங்கு இன்று விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா வரை பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில், ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், இந்த பயணிகள் ரயில் கொத்தவலசா அருகே வந்தபோது திடீரென தடம் புரண்டது. இந்த பயணிகள் ரயில் தடம்புரண்டதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தற்போது வரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, விரைந்து நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளி ரயில் விபத்து சம்பவம் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். விரைவான நிவாரண நடவடிக்கைகளை எடுக்கவும், காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார், ”என்று CMO X இல் (முன்னர் ட்விட்டர்) பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், விசாகப்பட்டினம் மற்றும் அனகப்பள்ளி மாவட்டங்களில் இருந்து முடிந்தவரை ஆம்புலன்ஸ்களை அனுப்பவும் , அருகிலுள்ள மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை அளிக்க அனைத்து விதமான ஏற்பாடுகளையும் செய்யுமாறு முதலமைச்சர் அறிவுறுத்தினார். சம்பவம் தொடர்பான விவரங்களை அவருக்கு அவ்வப்போது தெரிவிக்க வேண்டும்” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினம் - பலாசா பயணிகள் ரயில் மற்றும் விசாகப்பட்டினம் - ரகடா பயணிகள் ரயிலுக்கு இடையே பின்புறம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பெட்டிகள் சிக்கி, 10 பேர் காயமடைந்தனர்.
விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் ஹெல்ப்லைன் எண்கள்:
ரயில்வே எண் 83003; 83004; 83005; 83006
பிஎஸ்என்எல் லேண்ட் லைன் எண்: 08912746330; 08912744619
ஏர்டெல்: 8106053051; 8106053052
196760676016760: 8500041670; 8500041671
புவனேஸ்வர் - 0674-2301625, 2301525, 2303069
வால்டேர் - 0891- 2885914