• சரத்பாபு உயிரிழப்புக்கு காரணம் செப்சிசா..? அப்படி என்றால் என்ன? தப்பிப்பது எப்படி?


தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகராக உலா வந்த சரத்பாபு(Sarath Babu) நேற்று காலமானார். அவரது உயிரிழப்புக்கு செப்சிஸ்(Sepsis) பாதிப்பே காரணம் என்று தகவல்கள் வெளியாகியும் வந்தது. அவரது உயிரிழப்பு தொடர்பாக மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. இந்த நிலையில், செப்சிஸ் என்றால் என்ன? அதன் பாதிப்புகள் குறித்து கீழே காணலாம். மேலும் படிக்க



  • "சால்வைகள் பூங்கொத்துகள் வேண்டாம்… புத்தகங்களே போதும்.." முதலமைச்சர் சித்தராமையா வேண்டுகோள்..!


கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்ட நிலையில், மக்கள் அவருக்கு பூங்கொத்து, சால்வைகளை கொடுக்க வேண்டாம் என்றும், புத்தகங்களை கொடுங்கள் என்றும் கூறியுள்ளார். இது குறித்து சித்தராமையா தனது ட்விட்டர் பதிவில், "அடிக்கடி மரியாதை செலுத்தும் நபர்களிடம் இருந்து பூங்கொத்து அல்லது சால்வைகளை வாங்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். மக்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்த விரும்பினால் புத்தகங்களை கொடுக்கலாம். ஏதாவது பரிசுகள் வடிவில் மரியாதை செய்யலாம். உங்கள் அன்பும் பாசமும் என் மீது தொடர்ந்து இருக்கட்டும்," என்று எழுதியிருந்தார். மேலும் படிக்க



  • 1000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் அறிமுகமா..? ரிசர்வ் வங்கி ஆளுநர் பதில்..!


ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் ரிசர்வ் வங்கியிடம் இல்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். 2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட நிலையில் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் குறைக்கும் வகையில் 1,000 ரூபாய்நோட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் இந்திய ரிசர்வ் வங்கியிடம் இல்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர்  சக்திகாந்த தாஸ்  தெரிவித்துள்ளார் . ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு​ அது யூகம் என்றும்,  அப்படிப்பட்ட திட்டம் எதுவும் தற்போது இல்லை," என்றும் அவர் கூறினார். மேலும் படிக்க



  • விற்பனைக்கு வருது ‘மோடி மாம்பழம்’..! பிரதமர் பெயரில் மாம்பழம் உருவானது எப்படி?


பிரதமர் நரேந்திர மோடிக்கு மாம்பழம் என்றால் அவ்வளவு பிரியம். இதை அவரே பல தருணங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். மாம்பழ காதலர் மோடியின் பெயரில் புதிதாக ஒரு மாம்பழ வகை விரைவில் சந்தைக்கு வர இருக்கிறது.


கோடை என்றதும் நம் நினைவுக்கு வருவது விடுமுறையோடு, மாம்பழ சீசன். கோடையில் சுவை மிகுந்த பல வகையான மாம்பழங்கள் சாப்பிடலாம். அப்படி ஒருவர் மாம்பழத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளார். மேலும் படிக்க



  • திடீரென பின்னோக்கி சென்ற ரயில்.. அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்..! என்ன ஆச்சு..?


கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில்  ஷோரனூர் செல்லும் வேணாடு விரைவு ரயிலின் லோகோ பைலட் செரியநாடு என்ற சிறிய ரயில் நிலையத்தில் நிறுத்தாமல் சென்றுள்ளார். சிறிது நேரத்திற்கு பிறகே, ஸ்டேஷனை தவறவிட்டத்தை உணர்ந்த லோகோ பைலட், ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகளை ஏற்றி செல்வதற்காக ரயிலை கிட்டதட்ட 700 மீட்டர் தூரம் வரை பின்னோக்கி இயக்கியுள்ளார். இதனால் ரயிலுக்குள் இருந்த பயணிகளிடையே சலசலப்பு ஏற்பட்டது. மேலும் படிக்க