தமிழ்நாடு:



  • சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பயணம்; புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • அதிமுக ஆட்சி காலத்தில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி 2 மாஜி அமைச்சர்கள் ரூ.81 கோடி சொத்து குவிப்பு - நீதிமன்றங்களில் லஞ்ச ஒழிப்பு துறை 10,000 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்

  • கழிவுநீர் தொட்டி, பாதாள சாக்கடைகளில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை

  • விஷ சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த விவகாரம் - 12 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி

  • தமிழ்நாட்டில் ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்

  • வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 26ம் தேதி வரை மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல் 

  • செங்கல்பட்டு, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் செய்யபடுவதற்கான உத்தரவை ரத்து செய்து புதிய உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது.

  • விரைவு பேருந்துகளில் ஒரே மாதத்தில் 5 முறைக்கு மேல் பயணம் செய்வோருக்கு 6-வது பயணம் முதல் 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

  • 'இனி தொந்தரவு செய்ய வேண்டாம்.. எனது வாகனம் செல்லும்போது மக்களை நிறுத்த வேண்டாம்' - புதுவை முதலமைச்சர் உத்தரவு

  • தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் புழக்கம், கள்ளச்சாராய மரணங்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு ஆளுநரை சந்தித்து புகார் மனு அளித்தார்.


இந்தியா:



  • பப்புவா நியூ கினியாவில் அதிகாரப்பூர்வ டோக் பிசின் மொழியில் திருக்குறள்; வெளியிட்டார் பிரதமர் மோடி

  • தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகராக உலா வந்த சரத்பாபு(Sarath Babu) நேற்று காலமானார். அவரது உயிரிழப்புக்கு செப்சிஸ்(Sepsis) பாதிப்பே காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 

  • மக்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்த விரும்பினால் புத்தகங்களை கொடுக்கலாம். உங்கள் அன்பும் பாசமும் என் மீது தொடர்ந்து இருக்கட்டும் என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.

  • ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் ரிசர்வ் வங்கியிடம் இல்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். 

  • மாம்பழ காதலர் மோடியின் பெயரில் புதிதாக ஒரு மாம்பழ வகை விரைவில் சந்தைக்கு வர இருக்கிறது.

  • நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்கவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடுமையாக சாடியுள்ளார்.

  • இன்று முதல்  ரூ. 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என ஆர்பிஐ அறிவித்துள்ளது.


உலகம்:



  • எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க சீன நிறுவனத்துடன் இலங்கை புதிய ஒப்பந்தம் - அதிபர் அலுவலகம் தகவல்

  • அமெரிக்காவில் இருந்து விண்வெளிக்கு வணிக குழுவை மீண்டும் அனுப்பியது நாசா.

  • உக்ரைன் மீது தொடர் ஏவுகணை தாக்குதல் - 5 கண்காணிப்பு நிலைகளை அழித்த ரஷ்யா.

  • சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்குக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


விளையாட்டு:



  • ஐபிஎல் 16வது சீசனின் முதலாவது தகுதி சுற்றில் சென்னை - குஜராத் அணிகள் இன்று இரவு 7.30 மணிக்கு மோத இருக்கின்றன.

  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: இந்திய வீரர்கள் இன்று லண்டன் பயணம்

  • சென்னையில் நடைபெறும் உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டிக்கு ஜூன் மாதம் தொடங்குகிறது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 

  • குஜராத் அணிக்கு எதிரான தோல்வியை ஏற்றுகொள்ளாத சில பெங்களூரு ரசிகர்கள் எல்லை மீறி கில்லின் சகோதரியை சமூக வலைத்தளங்களில் தவறாக பேசி வருகின்றனர்.

  • இந்திய அணியின் புதிய கிட் ஸ்பான்சராக ஜெர்மன் ஸ்போர்ட்ஸ் பிராண்டான அடிடாஸின் பெயரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா நேற்று அறிவித்தார்.