கல்வியில் சிறந்த தமிழ்நாடு

Continues below advertisement

தமிழ்நாடு அரசு கல்வியில் செய்த சாதனைகள் குறித்து விளக்கும் வகையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

டிடிவியை சந்திக்கவில்லை - செங்கோட்டையன்

Continues below advertisement

“தனிப்பட்ட காரணங்களுக்காக மட்டுமே சென்னை சென்றேன். அரசியல் ரீதியாக யாரையும் சந்தித்து நான் பேசவில்லை. அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என பலர் என்னுடன் பேசி வருகிறார்கள். அது சஸ்பென்ஸ்”- டிடிவி தினகரனை சந்தித்ததாக வெளியான தகவல் தொடர்பான கேள்விக்கு செங்கோட்டையன் பதில்

பேருந்து லாரி மோதி விபத்து

உளுந்தூர்பேட்டை அருகே தனியார் டிராவல்ஸ் பேருந்து மீது லாரி மோதி விபத்து. 15 பேர் படுகாயம். ராமநாதபுரத்தில் இருந்து சென்னை நோக்கி 40 பயணிகளுடன் வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து சாலையோரம் நின்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த லாரி பேருந்தின் பின்னால் மோதியது. இதில் பேருந்து சாலை ஓரம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

லடாக்கில் அமைதி

‘லடாக்கில் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது, நேற்று மாலை 4 மணியில் இருந்து அங்கு எந்த வன்முறை சம்பவமும் நிகழவில்லை என உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ தகவல்!வன்முறையைத் தூண்டும் விதமான பழைய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என அறிவுறுத்தல்.

பெண்களுக்கு தலா ரூ. 10,000

பீகாரில் நாளை 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 வழங்கும், மகளிர் வேலை வாய்ப்புத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி. இதற்கு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு. பீகாரில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஒன்றிய அரசின் மிகப்பெரிய சலுகையாக இந்த திட்டம் பார்க்கப்படுகிறது.

மாணவர்கள் கவனத்திற்கு..

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.பிப்ரவரி 17ம் தேதி தொடங்கி, ஜூலை 15 வரை தேர்வுகள் நடைபெறும் என தெரிவிப்பு!பாடம், தேதி வாரியாக தேர்வுகள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என சிபிஎஸ்இ நிர்வாகம் தகவல்!

மும்பையில் முதல்முறையாக இரவு நேர ஃபார்முலா கார் பந்தயம்!

மகாராஷ்டிராவில் முதல்முறையாக இரவு நேர ஃபார்முலா கார் பந்தயம், வருகிற டிசம்பரில் நடைபெற உள்ளது. நவி மும்பையில் பாம் கடற்கரை சாலை மற்றும் நேருல் ஏரி வழியாக 14 திருப்பங்களுடன், 3.75 கி.மீ தூரத்திற்கு பந்தய சாலை அமைக்கப்படுகிறது.

தீர்வை நோக்கி பெங்களூரு

கடும் விமர்சனங்களை தொடர்ந்து, பெங்களூருவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 90 நாள் செயல் திட்டத்தை வெளியிட்டது கர்நாடக அரசு. சாலைகளில் பள்ளங்கள், முடிக்கப்படாத திட்டங்கள், குப்பைகள் அகற்றுதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளவும், போக்குவரத்து நெரிசலை குறைக்க அவுட்டர் ரிங் ரோட்டில் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கவும் முடிவு.

சூர்யகுமார் யாதவ் கருத்துக்கு ஷாஹீன் அப்ரிடி பதில்

“ஆசிய கோப்பையை வெல்லவே நாங்கள் இங்கு வந்துள்ளோம். இறுதிப்போட்டியில் யாரையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராகவே உள்ளோம். பெரிய அணிகளுக்கு எதிராக நாங்கள் வெற்றி பெறவில்லைதான், அதை மாற்றிக் காட்டுவோம்” -பாகிஸ்தான் Rivalry குறித்த இந்திய கேப்டனின் கருத்துக்கு ஷாஹீன் அப்ரிடி பதில்.

வங்கதேசத்தை வீழ்த்துமா பாகிஸ்தான்?

ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றின் இன்றைய போட்டியில்,வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இதில் வெற்றி பெறும் அணியே, இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால், ஆசியக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இறுதிப்போட்டியில் இந்தியா உடன் மோதக்கூடும்.