புதிய Mobile App ஐ அறிமுகம் செய்த தமிழ்நாடு அரசு
சென்னை குடிநீர் வாரியம் குறித்த அனைத்து புகார்களையும், ஒரே இடத்தில் பதிவு செய்ய 'சென்னை குடிநீர் செயலி என்ற App அறிமுகம். இடம், புகைப்படத்துடன் புகார் கூறினால் உரிய நேரத்தில் கோரிக்கைகள் உதவிப் பொறியாளர் மூலம் தீர்வு செய்யப்படும். இல்லை என்றால், 48 மணி நேரத்தில் உயர் அலுவலருக்குப் புகாரளிக்கலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு.
தவெகவினர் மீது வழக்குப்பதிவு
நாகை வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சொந்தமான மண்டபத்தின் சுற்றுச்சுவரை சேதப்படுத்திய தவெகவினர் மீது வழக்கு. நிபந்தனைகளை மீறி தனியார் சொத்துக்கு சேதம் விளைவித்ததால் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை என காவல்துறை விளக்கம்
எடப்பாடி பதவிக்கு முடிவுரை
“எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்று முடியாததால்தான் NDA கூட்டணியில் இருந்து விலகினோம். 2026 தேர்தல் முடிவுக்கு பின் இபிஎஸ்-ன் பொதுச்செயலாளர் பதவிக்கு முடிவுரை எழுதப்படும்"-டிடிவி தினகரன் விமர்சனம்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பேச்சு!
“நீதிபதிகள் பணத்திற்கு பதில், நீதி மற்றும் சுதந்திரத்தையே நேசிக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். தங்கள் அதிகாரத்தை மிகுந்த பணிவுடனும் பொறுப்புடனும் நீதிபதிகள் பயன்படுத்த வேண்டும். ஒரு சில நீதிபதிகள் செய்யும் மோசமான செயல்கள் கூட, முழு நீதித்துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும்”- கவாய்
பியுஷ் கோயல் அமெரிக்கா பயணம்
இந்தியா - அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த நாளை (செப்.22) வாஷிங்டன் செல்கிறார் மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல். டெல்லியில் அமெரிக்க வர்த்தகக் குழுவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து பயணம்.
ட்ரம்ப் எச்சரிக்கை
ஆஃப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் விமானப்படை தளத்தின் கட்டுப்பாட்டை ஒப்படைக்கவில்லை என்றால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என தாலிபான்களுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை.சீனாவின் அணு ஆயுத தயாரிப்பு மையத்திற்கு அருகே பக்ராம் தளம் அமைந்துள்ளதால், அதை கைப்பற்ற ட்ரம்ப் முயற்சி.
'நோபல் பரிசு வேண்டும்'
இந்தியா - பாகிஸ்தான் மோதலை வர்த்தகத்தின் மூலம் தீர்த்து வைத்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு. இதுவரை 7 போர்களை முடிவுக்குக் கொண்டுவந்த தனக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தல்.
இங்கிலாந்து முடிவு
பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்க பிரிட்டன் அரசு முடிவு. பாலஸ்தீனத்தை முறையாக அங்கீகரிக்கும் அறிவிப்பை அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இன்று (செப்.21) வெளியிடுகிறார். அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியில் இங்கிலாந்தின் முடிவு கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்
ஆசிய கோப்பை போட்டி: சூப்பர் 4 சுற்றின் 2வது ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் துபாயில் இன்று மோத உள்ளன. லீக் சுற்றில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்திய அணி
கைநழுவிய வெற்றி
இந்திய மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி.3வது ஒருநாள் போட்டியில் ஸ்ம்ரிதி மந்தனா (125) சதம் விளாசினாலும் 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி