திருச்சியில் விஜய் - அலைமோதும் தொண்டர்கள்
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக திருச்சி சென்றடைந்த தவெக தலைவர் விஜயை சூழ்ந்த தொண்டர்கள். கூட்டத்தை கடந்து செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், காவல்துறை அனுமதித்த நேரத்தில் விஜயால் பேசமுடியவில்லை. இதனால் கூடுதல் நேரம் ஒதுக்கப்படுமா? அல்லது நிபந்தனைகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
ஆபத்தை உணராத தவெக தொண்டர்கள்
சிறப்பு அறிக்கை வெளியிட்டும், ஆபத்தை உணராமல் தவெக தலைவர் விஜயை காண சுவற்றின் மீதும், மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் மீதும் ஏறி அமர்ந்திருக்கும் தவெக தொண்டர்கள். ஆபத்தை உணராத அவர்களின் இந்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளையராஜாவிற்கு இன்று பாராட்டு விழா
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் இன்று பாராட்டு விழா. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில், வெளிநாட்டு கலைஞர்களுடன் இளையராஜாவின் சிம்பொனி கச்சேரி நடைபெற உள்ளது.
பிரதமர் மோடி மணிப்பூர் பயணம்
இனக்கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக இன்று மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி. ரூ.7300 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதையடுத்துஇம்பால் நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுநாள் வரை உரிய நிவாரணங்கள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.
அச்சு ஊடகக்தின் மீது குறையாத நம்பிக்கை!
இந்தியாவில் கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை 2,97,44,148 செய்தித்தாள்கள் விற்பனை. இது கடந்த ஆண்டை விட 2.77% அதிகம் என ஆடிட் பீரோ ஆஃப் சர்க்குலேஷன்ஸ் (ஏபிசி) என்ற அமைப்பின் தணிக்கை அறிக்கையில் தகவல். இதன் மூலம் நம்பகமான, சரிபார்க்கப்பட்ட, ஆழமான செய்திகள், தகவல்களைப் பெற வாசகர்கள் தொடர்ந்து செய்தித்தாள்களை நம்புகிறார்கள் என்பது தெரியவந்துள்ளதாக கருத்து.
மலைப்பாம்பை சமைத்து உண்ட இருவர் கைது
கேரளா: மலைப் பாம்பை சமைத்து சாப்பிட்ட பிரமோத், பினிஷ் என்பவர்களை கையும் களவுமாக கைது செய்த வனத்துறை. பக்கத்து வீட்டுக்காரர் அளித்த தகவலின் பேரில் விசாரணை நடத்தச் சென்றபோது, மலைப் பாம்பு கறியை இருவரும் சாப்பிட்டு கொண்டு இருந்துள்ளனர்.
அமைதிப் பேச்சுவார்த்தை நிறுத்தம் - ரஷ்யா அறிவிப்பு
உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை நேற்று அறிவிப்பு. அமைதிப் பேச்சுவார்த்தை உடனடியாக பலன் தரும் என எதிர்பார்க்க முடியாது என ரஷ்யா தெரிவிப்பு. உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்த அதிபர் ட்ரம்ப் இரு நாடுகளின் தலைவர்களையும் தனித்தனியே சந்தித்து பேசினார், ஆனால் பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை!
ஜப்பான் அனிமேஷன் படத்துக்கு இந்தியாவில் பெரும் ஆதரவு!
இந்தியாவில் வெளியான முதல்நாள் நாளே ரூ.10 கோடி டிக்கெட் முன்பதிவை கடந்து சாதனை படைத்த ஜப்பானிய அனிமேஷன் திரைப்படமான 'Demon Slayer - Kimetsu no Yaiba Infinity Castle'. Manga Series-, Kimetsu no Yaiba இடம்பெற்றுள்ள Infinity Castle அத்தியாயத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம் 2K கிட்ஸ் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.
மாரியோ 2 ரெடி
பிரபல அனிமேஷன் திரைப்படமான Super Mario Bros அடுத்த பாகத்திற்கு Super Mario Galaxy Movie என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் அறிமுக க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு திரைப்படம் 2026 ஏப்ரல் 3ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு
ஃபில் சால்ட் அபாரம்
சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதம் விளாசியவர்களின் பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறினார் இங்கிலாந்து வீரர் ஃபில் சால்ட். ரோகித் சர்மா மற்றும் மேக்ஸ்வெல் தலா 5 சதங்களையும், சூர்ய குமார் மற்றும் ஃபில் சால்ட் தலா 4 சதங்களையும் விளாசியுள்ளனர். தென்னாப்ரிக்கா அணிக்கு எதிராக சதம் விளாசியதன் மூலம் சால்ட் இந்த சாதனையை படைத்துள்ளார்.