• ராமநாதபுரத்தில் உள்ள புல்லாங்கடி பகுதியில் நடக்கும் நிகழ்ச்சியில், ரூ.738 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, முடிக்கப்பட்ட திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
  • கரூர் விஜய் பிரசார கூட்டநெரிசல் மரணம் தொடர்பான பொதுநல வழக்குகள் மீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தொடங்கியது. மொத்தம் 7 வழக்குகள் விசாரணை. புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் முன் ஜாமின் மனுக்களும் விசாரணை.
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.880 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.10,840-க்கும், ஒரு சவரன் ரூ.86,720-க்கம் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமிற்கு 3 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 161 ரூபாய்க்கு விற்பனை.
  • தீபாவளியை முன்னிட்டு சென்னையிலிருந்து 108 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு. தமிழக பகுதிகளுக்கு 54, பிற மாநிலங்களுக்கு 54 ரயில்கள் இயக்கப்படும் என விளக்கம்.
  • மத்திய பிரதேசத்தில் 6 குழந்தைகள் இறப்புக்கு காரணமாக கூறப்படும் கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை தமிழகம் முழுவதும் விற்பனை செய்ய தடை. காஞ்சிபுரத்தில் உள்ள அதன் ஆலையிலிருந்து விநியோகிக்கவும் தடை விதிப்பு.
  • ஆந்திராவின் கர்னூல் அருகே தேவரகட்டில் நடந்த தசரா உற்சவத்தின்போது, ஒருவரை ஒருவர் தடியால் அடித்துக்கொள்ளும் விநோத திருவிழாவில், தடியடியால் இருவர் உயிரிழப்பு.
  • ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கக் கூடாது என இந்தியாவிற்கு நெருக்கடி கொடுக்கும் ட்ரம்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இந்திய மக்கள் ஒருபோதும் அமெரிக்காவின் அவமதிப்பை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் ரஷ்ய அதிபர் புதின் கருத்து.
  • புல்லட் ரயில், மெட்ரோ திட்டப் பணிகளுக்கான சுரங்கம் தோண்டும் இயந்திரங்களை இந்தியாவிலேயே தயாரிக்க ஜெர்மனி முடிவு. ஹெர்ரென்க்நெக்ட் நிறுவனம் இந்தியாவில் புதிய ஆலையை அமைப்பதாக ஜெர்மனி தூதர் தகவல்.