1. வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு.
  2. வங்கக் கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தகவல்.
  3. சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு! மாநில அரசு தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அரசு அலெர்ட்டாக உள்ளதாகவும் பேட்டி.
  4. கனமழையை தொடர்ந்து ஆய்வு பணிகளை மேற்கொள்ள, டெல்லா மாவட்டங்களுக்கு இன்று பயணிக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.
  5. சென்னையில் இன்று காலை வெயில் எட்டிப் பார்த்த நிலையில், தற்போது மீண்டும் மழைப்பொழிவு தொங்கியுள்ளது.
  6. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,400 குறைந்து 93 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை - ஒரு கிராம் ரூ.11,700-க்கு விற்பனை.
  7. சர்வதேச அளவில் தங்கத்தின் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரே நாளில் 6.3% சரிந்து, ஒரு அவுன்ஸ் சுமார் 4,082 டாலர்கள் வரை வர்த்தகம். 2013-க்கு பிறகு ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சி இதுவாகும்.
  8. கேரளா பத்தனம்திட்டாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வந்திறங்கிய ஹெலிகாப்டரின் டயர் கான்கிரீட் தளத்தில் சிக்கிய நிலையில், தீயணைப்பு வீரர்கள் அதனை சிறிது தூரம் தள்ளி மீட்டனர்.
  9. ஆந்திராவின் இந்துபுரத்தில் ரூ.1000 மதிப்புள்ள வெள்ளி செயினிற்காக இளைஞர் ஒருவரை பாட்டிலால் அடித்து, முகத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற 2 சிறுவர்கள் கைது.
  10. அமெரிக்க வெள்ளை மாளிகையில் குத்து விளக்கை ஏற்றி வைத்து இந்தியர்களக்க அதிபர் ட்ரம்ப் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். விழாவில், FBI இயக்குநர் காஷ் படேல், தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
  11. ரஷ்யாவிடமிருந்து இந்தியா அதிக எண்ணெய் வாங்காது என்று மோடி தனக்கு உறுதியளித்ததாகவும், ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வர வேண்டும் என்றும் அவர் விரும்புவதாகவும் ட்ரம்ப் ஏற்கனவே சொன்னதை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

 

Continues below advertisement

Continues below advertisement