• சென்னை எண்ணூர் அனல்மின் நிலைய கட்டுமானப் பணியின்போது ராட்சத வளைவு விழுந்த விபத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழப்பு.
  • எண்ணூர் அனல்மின் உற்பத்தி நிலைய கட்டுமானத்தின் போது 9 பேர் உயிரிழந்தது தொடர்பாக ஒப்பந்ததாரர்கள் ரித்தீஷ் குப்தா, அனுப், சுமீத் மணிகண்டன் ஆகியோர் மீது காட்டூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு.
  • தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது 5 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.87,000-த்தை கடந்தது. ஒரு கிராம் 10,890 ரூபாய்க்கும், ஒரு சவரன் 87,120 ரூபாய்க்கும் விற்பனை.
  • பீகாரில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கை நிறைவு. இறுதி வாக்காளர் பட்டியலில் சுமார் 68.6 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
  • கேரள மாநிலம் இடுக்கி ஓட்டலில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட தமிழ்நாட்டைச் சேர்நத் 3 பேர் உயிரிழப்பு.
  • ரயில் டிக்கெட் முன்பதிவில் இன்று முதல் புதிய மாற்றம் நடைமுறைக்கு வந்துள்ளது. முதல் 15 நிமிடங்களுக்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட IRCTC கணக்குகளை கொண்ட பயணிகள் மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதி.
  • ஆசிய கோப்பையை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், திலக் வர்மாவை அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி.
  • 4 நாட்களுக்குள் தான் முன்மொழிந்த 20 அம்ச திட்டத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், ஹமாசிற்கு சோகமான முடிவு ஏற்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை.
  • பிலிப்பைன்ஸில் 6.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம். கட்டிட இடிபாடுகளில் சிக்கி 21 பேர் உயிரிழப்பு. பலர் படுகாயம்.
  • மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி.