- கோவையில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிய மூவரை தனிப்படை காவல்துறையினர் சுட்டுப்பிடித்தனர்.
- கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 300 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து 3 குற்றவாளிகளையும் அடையாளம் கண்டதாக அம்மாவட்ட காவல் ஆணையர் சரவணசுந்தர் விளக்கம்.
- தமிழ்நாட்டில் இன்று SIR பணிகள் தொடங்க உள்ள நிலையில், அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தகவல்.
- தமிழ்நாட்டில், 2026-ல் நடைபெற உள்ள 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
- ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளரான நெல்லை ஆலங்குளம் தொகுதி மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ திமுகவில் இணைவதற்காக அண்ணா அறிவாலயம் வந்தார்.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் ரூ.90,000-க்கும், கிராமிற்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,250-க்கும் விற்பனை.
- மத்திய கிழக்கு வங்கக்கடல், மியான்மர் கடலோரப் பகுதிகளில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல். தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிப்பு.
- அரசுக்கு எதிரான வழக்கை என் தலைமையிலான அமர்வு விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பகிரங்க குற்றச்சாட்டு.
- 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இன்று முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடங்குகிறது. தமிழ்நாட்டில் 77,000 அலுவலர்கள் வீடு, வீடாக சென்று பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
- தொடர்ந்து ஏற்படும் நிலநடுக்கத்தால் சிக்கித் தவிக்கும் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா சார்பில் உணவு, மருந்து போன்ற நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு.
- பல்வேறு நாடுகள் அணு ஆயுத சோதனையில் ஈடுபடுவதைத் தொடர்ந்து, அமெரிக்காவும் அணு ஆயுத சோதனை நடத்துவது அவசியமானது மற்றும் பொருத்தமானது என அதிபர் ட்ரம்ப் பேச்சு.
- கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கனடாவில் படிக்க விண்ணப்பித்த இந்திய மாணவர்களில், 75 சதவீதம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
- மாலத்தீவில், 2007-ம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள் சிகரெட் பிடிக்கவும், அவர்களுக்கு விற்கவும் தடை விதிப்பு. இதன்மூலம், சிகரெட் விற்க தடை விதித்த முதல் நாடு என்ற பெருமையை பெற்றது மாலத்தீவு.
- மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியை நாளை தனது இல்லத்திற்கு அழைத்து வாழ்த்த உள்ளார் பிரதமர் மோடி.
Top 10 News Headlines: பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு, திமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவு MLA, அணு ஆயுத சோதனை-ட்ரம்ப் - 11 மணி செய்திகள்
ஸ்ரீராம் ஆராவமுதன் Updated at: 04 Nov 2025 11:01 AM (IST)
Top 10 News Headlines Today Nov. 4th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.
11 மணி தலைப்புச் செய்திகள்
NEXT PREV
Published at: 04 Nov 2025 11:01 AM (IST)