• அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் இணைந்த அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படுகிறது. 
  • துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 
  • தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் இணைந்தது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க மறுத்துள்ளார். 
  • சமூக நீதி காவலர் வி.பி.சிங் நினைவு நாளை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், EWS, NEET என விதவிதமான வழிகளில் சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் ஆட்சியாளர்கள் ஒன்றியத்தில் இருக்கும்போது வி.பி.சிங் போன்ற பிரதமரை இன்னும் கூடுதலாகவே 'Miss' செய்கிறோம் என தெரிவித்துள்ளார். 
  • சென்னை பரங்கிமலையில் 2022ம் ஆண்டு கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளி விட்டு கொலை செய்த குற்றவாளி சதீஷூக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் மனு தாக்கல் செய்த நிலையில் ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
  • தென்மேற்கு வங்கக்கடல் மற்றூம் அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கையில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இது அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது. புயலாக மாறினால் Ditwah என பெயர் சூட்டப்பட்டும்.
  • சபரிமலை கோயிலில் தங்கம் அபகரிக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் நடிகர் ஜெயராமை கைது செய்து விசாரிக்க விசாரணை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
  • கனிமங்கள் எடுக்கும் திறனை ஆண்டுக்கு 3 லட்சம் டன்னாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. 
  • நாடு முழுவதும் உயிரிழந்தவர்கள் 2 கோடி பேரின் ஆதார் எண்கள் நீக்கப்பட்டுள்ளதாக ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது
  • ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 44 பேர் பலியான சோகம் அரங்கேறியுள்ளது. இதுவரை 300க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. 
  • டி20 ஆல்ரவுண்டர் தர வரிசை பட்டியலில் ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். முத்தரப்பு டி20 தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டாதால் முன்னேற்றம் அடைந்துள்ளார்.