பெங்களூரு மின்சார விநியோக நிறுவனத்தின் (BESCOM) அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நவம்பர் 27 ஆம் தேதி பெங்களூருவின் லால்பாக் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று அறிவித்துள்ளது
பெங்களூரு மின் தடை:
பெங்களூரு மின்சார விநியோக நிறுவனத்தின் (BESCOM) அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நவம்பர் 27 ஆம் தேதி பெங்களூருவின் லால்பாக் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஏழு மணி நேரம் வரை மின் தடை ஏற்படும்.
பெங்களூரு மின்சார விநியோக நிறுவனம்(BESCOM), நவம்பர் 27 ஆம் தேதி மின்வெட்டு ஏற்ப்படும் என அறிவித்தது. இந்த நேரத்தில் மக்கள் ஒத்துழைக்குமாறும் அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மின் தடை ஏற்படும் போது இடைப்பட்ட மின்சார விநியோகத்தை அனுபவிப்பார்கள்.
எவ்வளவு நேரம் மின்வெட்டு?
இந்த மின்வெட்டு 7 மணி நேரம் மின்வெட்டு இருக்கும் எனவும், இருப்பினும், ஒவ்வொரு பகுதியிலும் பணிகள் முடிவடைதை பொறுத்து நேரங்கள் மாறுபடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் பெஸ்காம் நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த பகுதியில் மின் தடை?
நாளை வில்சன் கார்டன், ஹோம்பே கவுடா நகர், சம்பங்கிராம் நகர், ஜேசி சாலை, சாந்திநகர், பிடிஎஸ் சாலை, ரிச்மண்ட் வட்டம், ரெசிடென்சி சாலை, சுதம் நகர், ஹோம்பேகவுடா நகர் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படவுள்ளது.
பெஸ்காம் மின்சாரம் வழங்கும் இடங்கள்
கர்நாடகாவின் எட்டு மாவட்டங்களான பெங்களூரு நகர்ப்புறம், பெங்களூரு கிராமப்புறம், சிக்கபல்லபுரா, கோலார், தாவணகெரே, தும்கூர், சித்ரதுர்கா மற்றும் ராமநகரா ஆகிய மாவட்டங்களுக்கு மின்சாரம் வழங்கும் பொறுப்பு பெஸ்காமுக்கு உள்ளது. இந்த நிறுவனம் 41,000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவையும் கோடிக்கும் மேற்பட்ட மக்களையும் கொண்டுள்ளது. இது நான்கு மண்டலங்கள், ஒன்பது வட்டங்கள், 32 பிரிவுகள், 147 துணைப்பிரிவுகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட பிரிவு அலுவலகங்கள் வழியாக செயல்படுகிறது.