முதலமைச்சர் ஸ்டாலின் சூளுரை
மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர்களுக்கு கால நிர்ணயம் செய்யப்படும் வரை ஓயப்போவது இல்லை. உச்சநீதிமன்றத்தின் கருத்து தமிழ்நாடு அரசு பெற்ற தீர்ப்பில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நாளை முதல் கனமழை?
வங்கக் கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி. இன்று நெல்லை, ராமநாதபுரம், கடலூர், திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல். சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு என கணிக்கப்பட்டுள்ளது.
பவாரியா வழக்கில் இன்று தீர்ப்பு
பவாரியா கொள்ளையர்களால் அதிமுக முன்னாள் MLA சுதர்சனம் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் 20 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம்.
2005ம் ஆண்டு முன்னாள் MLA சுதர்சனத்தை சுட்டுக்கொன்ற கொள்ளையர்களை ராஜஸ்தான் வரை தேடிச் சென்று பிடித்தது அப்போதைய ஐ.ஜி. ஜாங்கிட் தலைமையில் தனிப்படை போலீஸ்.
தப்புவாரா ஆதவ் அர்ஜுனா?
கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து, X தளத்தில் வன்முறையை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டதற்காக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி தவெகவின் ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
தென்னாப்ரிக்கா சென்ற பிரதமர் மோடி
ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க 3 நாள் பயணமாக தென்னாப்பிரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி. ஜொஹன்னஸ்பர்கில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் காலநிலை மாற்றம், எரிசக்தி உள்ளிட்டவை குறித்து பிரதமர் உரையாற்றவுள்ளார்.
பீகார் அமைச்சரவை
பீகாரில் தனிப்பெரும் கட்சியான பாஜகவுக்கு நிதிஷ்குமார் அமைச்சரவையில், JDUவை விட அதிக இடங்கள் (14) ஒதுக்கப்பட்டுள்ளன. JDUவுக்கு 8, LJPக்கு 2, பிற கட்சிகளுக்கு இரு இடங்களும் ஒதுக்கப்பட்ட நிலையில் அதிகபட்சமாக அமைச்சரவையில் 36 பேர் வரை இடம் பெற முடியும். விரைவில் அமைச்சரவை விரிவாக்கமும் எதிர்பார்க்கப்படுகிறது.
காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து!
பிரேசிலில் உள்ள பெலேம் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து, 21 பேர் படுகாயம். பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் உள்பட 50,000க்கும் மேற்பட்டோர் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு அங்கிருந்து வெளியேறினர்.
இந்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் உள்பட இந்திய குழுவில் சுமார் 20 பேர் அங்கு இருந்ததாகக் கூறப்படுகிறது.
ஸ்மிருந்த மந்தனாவிற்கு திருமணம்
தனக்கு திருமணம் நிச்சயம் ஆனதை வீடியோ மூலம் அறிவித்த கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் பலாஷ் மூச்சலை வரும் 23ம் தேதி கரம் பிடிக்கிறார்.
இந்தியர்கள் பதக்க வேட்டை
உலக கோப்பை குத்துச்சண்டையின் இறுதிச்சுற்று போட்டிகளில் 9 தங்கம் உள்பட 20 பதக்கங்களை கைப்பற்றி இந்திய வீரர், வீராங்கனைகள் அதிரடி. நுபுர் ஷியோரன் (80 + kg) நிகத் சரீன் (51 kg), அருந்ததி சௌத்ரி (70kg), ஹிதேஷ் குலியா (70kg), சச்சின் சிவாச் (60kg) உள்ளிட்ட 9 பேர் தங்கமும், 6 பேர் வெள்ளியும், 5 பேர் வெண்கலமும் வென்றனர்.
இங்கிலாந்து அணி தடுமாற்றம்
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்றுள்ளது. பெர்த் மைதானத்தில் நடைபெறும் முதல் போடிட்யில், இங்கிலாந்து அணி 115 ரன்களை சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ஜாக் க்ராவ்லி மற்றும் ஜோ ரூட் டக்- அவுட் ஆக, ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.