முன்னாள் அமைச்சருக்கு திமுகவில் பதவி
அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மைத்ரேயன் திமுக கல்வியாளர் அணி துணைத் தலைவராக நியமனம். கடந்த ஆகஸ்ட் மாதம் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்.பி. மைத்ரேயன்,
கடிக்க வந்த நாயை கொலை செய்த நபர் கைது
சென்னை மயிலாப்பூரில் தெரு நாயை அடித்துக் கொன்று குப்பைத் தொட்டியில் வீசிய நபர் கைது. விலங்குகள் நல ஆர்வலர்களின் புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார். தனது டீ கடைக்கு வந்த முதியவரை கடிக்க வந்த | நாயை, கடை உரிமையாளர் மோகன் (56) விரட்டிய போது அவரையும் கடிக்க வரவே, கட்டையால் தாக்கியுள்ளார்
'நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறுவதால் புதுச்சேரியில் நாளை (15.11.25)பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. ஏற்கெனவே விடப்பட்ட விடுமுறையை ஈடுகட்டும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. டெட் தேர்வு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக புதுச்சேரி பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு.நாளைய விடுமுறையை ஈடுசெய்ய அடுத்த ஆண்டு ஜன.3ம் தேதி வேலைநாளாக செயல்படும் என அறிவிப்பு
பாஜக கூட்டணி முன்னிலை
பீகாரில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் NDA கூட்டணி முன்னிலை.தேர்தல் ஆணைய அறிவிப்புப்படி இந்தியா கூட்டணி 46 இடங்களிலும், தே.ஜ., கூட்டணி 140 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. பாஜகவை பின்னுக்குத் தள்ளி தனிப்பெரும் கட்சியாக நிதிஷின் JDU கட்சி உருவெடுத்து வருகிறது.
மீண்டும் முதலமைச்சராகும் நிதிஷ்குமார்
பீகார் தேர்தலில் நிதிஷ்குமார் மற்றும் பாஜக கூட்டணி, பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை காட்டிலும் கூடுதலான தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதனால், கூட்டணிக்கு மாநிலத்தில் தலைமை வகிக்கும் நிதிஷ்குமார் மீண்டும் பீகார் முதலமைச்சர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் மீது விமர்சனம்
”தேர்தல் நடந்துகொண்டிருந்த சமயத்தில் ராகுல் காந்தி வெளியூரில் இருந்தார். தேர்தல் முடிவுகள் வெளிவரும் இன்று கூட ராகுல் காந்தி ஐரோப்பாவில் இருக்கிறார்; பிரியங்கா காந்தி நியூ யார்க்கில் இருக்கிறார். தேர்தலை எவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்கிறார்கள் என்பதற்கு இதெல்லாம் அளவுகோள் - பத்திரிகையாளர்கள் விமர்சனம்
அமித் ஷா வார்னிங்
டெல்லி கார் வெடிப்பு குற்றவாளிகளுக்கு முடிந்தளவுக்கு மிகக்கடுமையான தண்டனை வழங்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம். இனி இதுபோன்ற தாக்குதலில் ஈடுபட யாரும் நினைத்துப் பார்க்கக் கூடத் துணியாத அளவுக்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் விழா ஒன்றில் அமித் ஷா பேச்சு
போராடி தோல்வி
கோவாவில் நடைபெற்று வரும் ஃபிடே செஸ் உலக கோப்பையின் 4வது சுற்றில் ரஷ்யாவின் டேனியல் டுபோவிடம் இந்திய வீரர் பிரக்ஞானந்தா தோல்வி. 24 இந்திய வீரர்கள் இத்தொடரில் பங்கேற்ற நிலையில், 5வது சுற்றுக்கு அர்ஜூன் எரிகஸி மற்றும் ஹரிகிருஷ்ணா மட்டுமே தகுதி.
தெ.ஆப்., பேட்டிங்
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங் தேர்வு.அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகிய 4 சுழற்பந்துவீச்சாளர்களை துருப்புச்சீட்டாக இந்தியா பயன்படுத்த உள்ளது.
எனக்கா ரெட்கார்ட்..
22 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக போர்ச்சுகல் அணிக்காக ரெட் கார்டு வங்கிய கிறிஸ்டியானோ ரொனால்டோ. டப்லினில் நடைபெற்ற FIFA உலகக் கோப்பை 2026 தகுதிச் சுற்று ஆட்டத்தில், அயர்லாந்து வீரர் டாரா ஓ'ஷியா-வை முழங்கையால் தள்ளி ஃபவுல் செய்ததற்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது. இதனால் ரொனால்டோ உலகக் கோப்பையில் பங்கேற்பதற்கான வாய்ப்பை இழக்கக்கூடும் என கூறப்படுகிறது.