தமிழ்நாடு பட்ஜெட் 2025:
தமிழ்நாடு இந்தியாவுக்கே முன்னோடியாக தமிழ்நாடு திகழ்கிறது. இந்தியாவின் 2வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக திகழ்கிறது தமிழ்நாடு எத்தனை தடைகள் வந்தாலும் சமநிலை தவறாது, நம் உரிமைகளைக் காக்கும் முதலமைச்சரை நாடே பாராட்டிக்கொண்டு இருக்கிறது.
சென்னைக்கு அருகே புதிய நகரம்:
நாட்டிலேயே அதிக நகரமயமாக்கல் சவாலை தமிழ்நாடு சந்தித்துவருகிறது இதற்கேற்ற, குடிநீர், சாலை, போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்கின்றன. எனினும் புதிய நகரங்கள் அமைக்கும் தேவை உள்ளது சென்னைக்கு அருகே 2000 ஏக்கரில் புதிய நகரம் அமைக்கப்படும். நவீன வசதிகள் கொண்டதாக இந்நகரம் அமையும். சென்னையை புதிய நகருடன் இணைத்திட போக்குவரத்து, மெட்ரோ வழித்தட நீட்டிப்பு ஆகியவை மேற்கொள்ளப்படும்.
சந்திரபாபு கருத்து அவையில் சிரிப்பலை
ஆந்திராவில் ஒவ்வொரு பெண்ணும் குறைந்தபட்சம் 2 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். கிராமங்கள் மற்றும் தொகுதிகளில் இது குறித்து விவாதங்களை நடத்தி வெளிப்படையாகப் பேசத் தொடங்க வேண்டும்” சட்டப்பேரவையில் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பேச்சு இதை ஊக்குவிக்க, தேவைப்பட்டால் வீடுகள் கண்காணிக்கப்படலாம் என நகைச்சுவையாகப் பேசியது சட்டப்பேரவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
திருக்குறள் மொழிப்பெயர்ப்பு:
47 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 500 இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ரூ.1.33 கோடி ஒதுக்கீடு பழம்பெரும் ஓலைச்சுவடிகள், கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் மயமாக்கப்படும்.
8 இடங்களில் தொல்லியல் ஆய்வு:
சிவங்கை - கீழடி, சேலம் - தெலுங்கனூர், கோவை - வெள்ளலூர், கள்ளக்குறிச்சி - ஆதிச்சனூர், கடலூர் - மணிக்கொல்லை, தென்காசி - கரிவலம்வந்தநல்லூர், தூத்துக்குடி - பட்டணமருதூர் மற்றும் நாகை ஆகிய 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் நடத்தப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு.
புதிய கின்னஸ் சாதனை:
உலகிலேயே நீண்ட நேரம் ஹெர்குலஸ் மாதிரி தூண்களை தனது இரு கைகளால் தாங்கிப் பிடித்து கின்னஸ் சாதனை படைத்த குஜராத்தை சேர்ந்த விஸ்பி காரடி. 320 கிலோ எடை கொண்ட தூண்களை 2 நிமிடம் 10.75 வினாடிகள் பிடித்து அசத்தல். இவர் ஏற்கனவே பல கின்னஸ் சாதனைகளை தன்வசப்படுத்தியுள்ளார்.
கச்சத்தீவு திருவிழா
கச்சத்தீவு அந்தோனியார் ஆலயத் திருவிழா இன்று மாலை தொடங்கவுள்ளது. இதற்காக இந்தியாவில் இருந்து செல்ல முன்பதிவு செய்த 3464 பக்தர்கள் படகுகளில் புறப்பட்டனர். தீவிர சோதனைக்குப் பிறகு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மூன்றாம் பாலினத்தவருக்கு திட்டம்:
உயர்கல்வி பெறும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் எனவும் ஊர்க்காவல் படையிலும் மூன்றாம் பாலினத்தவரை ஈடுபடுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி அணிக்கு புதிய கேப்டன்:
டெல்லி கேபிடல்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய ஆல் ரவுண்டர் அக்சர் பட்டேல் அறிவிக்கப்பட்டுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் டெல்லி அணிக்காக கே.எல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கபப்ட்ட நிலையில் அக்சர் பட்டேல் கேப்டனாகியுள்ளார்.
அன்புச்சோலை திட்டம்:
மூத்த குடிமக்களுக்கான அன்புச்சோலை மையம் மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாநகராட்சிகளில் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 25 அன்புச்சோலை மையங்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு.