- NDA கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து பதிலளித்த அமித் ஷா, தேர்தலில் நாங்கள் அதிமுக தலைமையின் கீழ் போட்டியிடுகிறோம், அக்கட்சியில் இருந்து முதலமைச்சர் வருவார் என எடப்பாடி பழனிசாமி பெயரை குறிப்பிடாமல் தெரிவித்தார்.
- NDA கூட்டணியில் தவெக இணையுமா என்ற கேள்விக்கு, சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் போதுமான கால அவகாசம் உள்ளது, அதனால் சில காலம் காத்திருங்கள் என அமித் ஷா பதிலளித்துள்ளார்.
- ஜூலை 7-ம் தேதி பொறியியல் கலந்தாய்வு தொடங்குவதாக அமைச்சர் கோவி.செழியன் அறிவித்தார். தமிழ்நாட்டில் பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 14 தொடங்கி 17ம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவிப்பு.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் சவரனுக்கு ரூ.680 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.8,985-க்கும், ஒரு சவரன் ரூ.71,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- பிரதமர் மோடி ஜூலை 2-ம் தேதி முதல் 5 நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். பிரேசிலில் நடைபெறும் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.
- நாடு முழுவதும் ரயில் கட்டணத்தை உயர்த்துவது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை என்றும், ஆலோசனைகள் மட்டுமே நடைபெற்று வருவதாகவும் மத்திய அமைச்சர் சோமண்ணா விளக்கமளித்துள்ளார்.
- அகமதாபாத் விமான விபத்தில், ஏர் இந்தியா விமானத்தின் 2 கருப்புப் பெட்டிகளிலிருந்தும் தரவுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- தேசிய நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனங்களுக்கு சுங்கவரி கிடையாது என்றும், ஃபாஸ்டேக் முறையில் இருந்து இருசக்கர வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு.
- 2025 ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்திய திரைத்துறையில் இருந்து நடிகர்கள் கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- ஈரான் தலைவர் காமேனி பதுங்கியிருந்ததாக கூறப்பட்ட நிலையில், நேற்று ஈரான் ஊடகத்தில் தோன்றி பேசியுள்ளார். அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், பதிலடி மூலம் அமெரிக்காவின் முகத்தில் அறைந்ததாக கூறியுள்ளார்.
Top 10 News Headlines(27.06.25): NDA கூட்டணி முதல்வர் வேட்பாளர் யார்?, ரயில் கட்டணம் உயர்வா? ஈரான் தலைவர் துணிச்சல் பதிவு - 11 மணி செய்திகள்
ஸ்ரீராம் ஆராவமுதன் Updated at: 27 Jun 2025 11:02 AM (IST)
Top 10 News Headlines Today June 27: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் குறித்து தப்போது பார்க்கலாம்.
காலை 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு
NEXT PREV
Published at: 27 Jun 2025 11:02 AM (IST)