• நீட் வினாத்தாள் முதல், முடிவுகள் வரை முறைகேடுகளே நிறைந்துள்ளதாக, மராட்டியத்தில் நடந்த முறைகேட்டை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம்.
  • பரபரப்பான அரசியல் சூழலில், சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் வகையில், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 22 மாவட்ட அதிமுக செயலாளர்களுடன் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்றும், நாளையும் ஆலோசனை நடத்துகிறார்.
  • போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 8 முறை போதைப் பொருள் வாங்கிக் கொடுத்ததாக கூறப்படும் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்தை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை முடிவு.
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.9,155-க்கும், ஒரு சவரன் ரூ.73,240-க்கும் விற்பனை.
  • திருப்பதி ஏழுமலையான திருக்கோயிலில் லட்டு வாங்க இனி வரிசையில் நிற்காமல், பிரத்யேக இயந்திரத்தில் QR கோட்-ஐ ஸ்கேன் செய்த விரைவாக பணம் செலுத்தி லட்டை பெறும் வசதி அறிமுகம்.
  • இந்தியாவின் ஆபரேஷன் சிந்து மூலம் ஈரானில் இருந்து இன்று 290 இந்தியர்கள் தாயகம் திரும்பினர். இதுவரை 2003 பேர் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்.
  • சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் புட்டோ தெரிவித்துள்ளார்.
  • கத்தார், ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதையடுத்து கத்தார் தோகா விமான நிலையம் மூடப்பட்டது.
  • இஸ்ரேல் உடனான போரை நிறுத்துவதாக ஈரான் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னதாக ட்ரம்ப் வெளியிட்ட போர் நிறுத்த அறிவிப்பை மறுத்த நிலையில், தற்போது அறிவிப்பு.
  • ஒரு டெஸ்ட் போட்டியில்(2 இன்னிங்ஸ் சேர்த்து) அதிக ரன்களை குவித்த ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சங்ககாராவின் சாதனையை முறியடித்தார் இந்தியாவின் ரிஷப் பண்ட்.