• தமிழகத்தில் ஆமை வேகத்தில் அந்நிய முதலீடுகள் இருப்பதாகவும், அந்நிய முதலீடுகளை ஈர்ப்பத்தில் தேசிய அளவில் தமிழ்நாடு 5-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.
  • மதுரை முருக பக்தர்கள் மாநாடு எந்த திருப்புமுனையையும் ஏற்படுத்தாது என்றும், அண்ணா, பெரியாரை விமர்சித்த மேடையில் அதிமுகவினர் அமர்ந்தது அவர்களது அடிமைத்தனத்தை காட்டுவதாக அமைச்சர் சேகர் பாபு வமர்சித்துள்ளார்.
  • கிருஷ்ணகிரி கீழ்புதூரில், தவெக தலைவர்விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, அக்கட்சி நிர்வாகிகள் பட்டாக்கத்தியுடன் மோதிக்கொண்டதால் பரபரப்பு.
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.9,230-க்கும், ஒரு சவரன் ரூ.73,840-க்கும் விற்பனை.
  • ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் கார் டயரில் சிக்கி தொண்டர் உயிரிழந்த விவகாரத்தில், ஜெகன் மோகன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு. கார் ஓட்டுநர் ரமண ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
  • குஜராத்தில் 5 தொகுதிகளில் நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 2 இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலையில் உள்ளது. பாஜக, காங்., டிஎம்சி தலா ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளன.
  • ஏர் இந்தியா நிறுவனம், 19 வழித்தடங்களில் 118 வாராந்திர விமானங்களின் சேவையை தற்காலிகமாக குறைக்க முடிவு செய்துள்ளது. பெங்களூரு - சிங்கப்பூர் உள்ளிட்ட 3 வழித்தடங்களில் 7 வாராந்திர விமான சேவைகளை நிறுத்துவதாகவும் அறிவிப்பு.
  • இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை மூட ஈரான் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
  • தற்போதைய ஈரானிய ஆட்சியால் அந்நாட்டை மீண்டும் சிறந்த நாடாக மாற்ற முடியவில்லை என்றால், அங்கு ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடாது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.
  • இந்தியா, இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட கனடா அணி தகுதி பெற்றுள்ளது.