• கீழடி அகழாய்வுகள் குறித்த ஆய்வறிக்கையை பாஜக அரசு திட்டமிட்டு புறக்கணிப்பதாகவும், சிந்துவெளி நாகரிகத்தை அழிக்க முயற்சிப்பதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
  • மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல். மீன்களை அள்ளிச் சென்றதாக குற்றச்சாட்டு.
  • கரூரில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி பென்சில் தமிழரசனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர்.
  • தங்கம் இன்று சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.9,265-க்கும், ஒரு சவரன் ரூ.74,120-க்கும் விற்பனையாகிறது.
  • அகமதாபாத்தில் விபத்திற்குள்ளான ஏர் இந்தியா போயிங் 787 விமானத்தின் கருப்புப் பெட்டி ஆய்வுக்காக அமெரிக்கா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பெட்டியின் வெளிப்புறத்தில் சேதம் ஏற்பட்டதால், டிஜிட்டல் ரெக்கார்டிங் தரவை மீட்க நடவடிக்கை.
  • வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் சர்வதேச விமான சேவைகளை 15 சதவீதம் வரை குறைப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. விமான செயல்பாடுகளின் நம்பகத்தன்மை மற்றம் செயல்திறனை உறுதி செய்யவும், பயணிகள் சிரமத்தை குறைக்கவும் நடவடிக்கை என தெரிவிப்பு.
  • அணு ஆயுத நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியதாக ட்ரம்ப் மீண்டும் அறிவித்துள்ளார். நேற்று தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி பேசி தெளிவுபடுத்திய நிலையில், மீண்டம் அறிவிப்பு.
  • இஸ்ரேல் உடன் மோதல் வெடித்துள்ள நிலையில் ஈரானில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணிகளை, ஆப்ரேஷன் சிந்து என்ற பெயரில் மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதில், முதற்கட்டமாக புறப்பட்ட 110 பேர் இன்று இந்தியா வந்தடைந்தனர்.
  • ஈரானுடனான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவளித்து வரும் நிலையில், அமெரிக்காவும் நேரடியாக தாக்குதலை நடத்த தயாராகி வருவதாக தகவல் கசிந்துள்ளது. அந்நாட்டின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
  • அமெரிக்காவிற்கு ஈரானும் எச்சரிக்கை விடுத்த நிலையில், மத்திய கிழக்குப் பகுதிகளில் அமெரிக்க ராணுவம் அதிகரிக்கப்படுகிறது. கூடுதல் போர் விமானங்கள், கப்பல்கள் வரவழைக்கப்பட்டுள்ளது.
  • உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்திய நிலையில், 14 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் கீவ்-ல் இரவில் வானுயர கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 44 பேர் காயமடைந்துள்ளனர்.