திமுக நிர்வாகிகளை சந்திக்கும் முதலமைச்சர்
அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக நிர்வாகிகளை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில், ஜூன் முதல் வாரத்தில் 'ஒன் டூ ஒன் பேசுவோம்' எனக் கூறியிருந்த நிலையில், இன்று முதற்கட்டமாக சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதி நிர்வாகிகளுடன் சந்திப்பு.
விஜய் கோரிக்கை
“இளைய காமராஜர் என்றெல்லாம் எதுவும் சொல்லாதீர்கள். 2026 பற்றியும் எதுவும் பேசவேண்டாம்”- பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கான கல்வி விருது விழாவில் தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்
நிவாரணம் அறிவிப்பு
சென்னை அடுத்த ராமாபுரத்தில் மெட்ரோ கான்கிரீட் விழுந்ததில் உயிரிழந்த ரமேஷ்க்கு மெட்ரோ நிர்வாகம் சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு. கட்டுமானம் பணிகளை மேற்கொள்ளும் எல் & டி நிறுவனமும் இழப்பீடுகளை வழங்கவுள்ளதாக தகவல்.
தென்காசியில் மேலும் ஒருவர் பலி
தென்காசி அருகே முதியோர் இல்லத்தில் 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில், மேலும் ஒருவர் உயிரிழப்பு. உணவு செரிமான கோளாறால் பாதிக்கப்பட்ட தனலட்சுமி (70) என்ற மூதாட்டி இன்று காலை உயிரிழந்தார். சுந்தரபாண்டிய புரத்தில் தனியார் காப்பகத்தில் மாமிச உணவு அருந்திய மூவர் நேற்று உயிரிழந்த நிலையில், காப்பகத்துக்கு சீல் வைப்பு.
பிரதமர் மோடி நேரில் ஆய்வு
அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்துக்குள்ளான இடத்துக்கு சென்று பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர்களை சந்தித்து நலம் விசாரிக்க உள்ளார்.
TRAFFIC-ஆல் உயிர் தப்பிய பெண்!
குஜராத்: போக்குவரத்து நெரிசலில் சிக்கி 10 நிமிடங்கள் தாமதமாக சென்றதால் அகமதாபாத் விமான விபத்தில் இருந்து தப்பிய பூமி சவுகான். இந்த விபத்தால் அதிர்ச்சியடைந்தேன். இதில் இருந்து மீள முடியவில்லை என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
“இந்தியாதான் முதலிடம்”
உலகில் பாம்பு கடித்து உயிரிழப்போரின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் பிடித்து உள்ளதாக WHO உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் தகவல். இந்தியாவில் ஆண்டுதோறும் 58,000 பேர் பாம்பு கடித்து இறக்கின்றனர். பாரம்பரிய மருத்துவத்தை நம்புவது, தாமதமான சிகிச்சை, போதிய பராமரிப்பு இல்லாதது போன்றவை இறப்புக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
அழிவின் விளிம்பில் மின்மினி பூச்சி
மின்மினி பூச்சிகளின் எண்ணிக்கை உலகளவில் குறைந்து வருவதால், அவற்றை காணும் கடைசி தலைமுறையாக நாம் இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தகவல். ஒளி மாசுபாடு, நகரமயமாதல், பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவது உள்ளிட்டவற்றால் அந்த இனம் அழிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காதலி வேண்டி விளம்பரம்
சீனா: படகு போட்டியின்போது இளம்பெண்களை ஈர்ப்பதற்காக “நான் திருமணமாகாதவன். சொந்தமாக 2 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன” என எழுதிய அட்டையை கழுத்தில் அணிந்திருந்த லின் (35) என்ற நபர். காதல் தோல்வியால் வேதனையில் இருந்ததால், தனது நண்பரின் யோசனைப்படி இவ்வாறு செய்துள்ளார். தற்போது நிறைய பெண்கள் தன்னை தொடர்பு கொண்டாலும், சந்தோஷமாக வாழ குடும்ப பாங்கான பெண் வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சாதிக்குமா தென்னாப்ரிக்கா?
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 218 ரன்கள் முன்னிலை. 2ம் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்துள்ளது. மீதமுள்ள 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, 200க்கும் அதிகமான ரன்களை சேஸ் செய்து தென்னாப்பிரிக்கா வெற்றியை சுவைக்குமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.