விபத்து-மூவர் உயிரிழப்பு
கடலூர் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் கடலூர் - மயிலாடுதுறை மார்க்கத்தில் ரயில் சேவை பாதிப்பு. இந்த கோர விபத்தில் 3 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு.
கடலூர் விபத்து - முதலமைச்சர் இரங்கல், நிவாரணம்
கடலூர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த 2 இளம் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தலா ரூ.5 லட்சம் உடனடி நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கவும் உத்தரவு.
அன்புமணி வலியுறுத்தல்
ரயில்வே லெவல் கிராசிங் இருக்கும் இடங்கள் அனைத்திலும் மேம்பாலங்களை அமைக்க மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூரில் ரயில்வே கேட்டை கடந்தபோது பள்ளி வேன் விபத்தில் சிக்கியதில் மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
தொழில் முதலீட்டில் தமிழ்நாடு முதலிடம்!
நாட்டிலேயே தொழில் தொடங்க உகந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம். உலகளவில் தொழில் முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டை தேர்வு செய்கின்றனர். திராவிட மாடல் ஆட்சியில் தொழில் துறையில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது -டி.ஆர்.பி.ராஜா
சுற்றுலாத்துறையில் டெண்டர்
மாமல்லபுரம், திருச்செந்தூர், குமரியில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த தனி ஆணையம் - விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு
இந்த 3 இடங்களில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த மாஸ்டர் பிளான் தயார் செய்ய டெண்டர் . சுற்றுலா வசதிகளை மேம்படுத்தவது தொடர்பாக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுவத்துவது, கடற்கரைகளை மேம்படுத்துவது, பொழுதுபோக்கு சார்ந்த சுற்றுலா வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரிவு வாரியாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது.
பீடி இலைகள் பறிமுதல்
தூத்துக்குடி விவேகானந்தர் காலனி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு ஃபைபர் படகு மூலம் கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்பிலான சுமார் 1200 கிலோ எடை கொண்ட பீடி இலைகள் பறிமுதல். கடத்தலுக்குப் பயன்படுத்திய ஃபைபர் படகுகளையும் க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
லாராவின் சாதனை முறியடிக்காதது ஏன்?
“பிரையன் லாரா ஒரு சகாப்தம் - இதை நாம் | மறுக்கவே முடியாது. இங்கிலாந்துக்கு எதிராக அவர் குவித்த 400 ரன்கள் என்பது கிரிக்கெட் வரலாற்றில் பொறிக்கப்பட்ட ஒரு சாதனை.
அத்தகைய மகத்தான வீரரின் வசம் அந்த சாதனை இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. மீண்டும் எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தாலும், அதே முடிவைத்தான் எடுப்பேன். ஏனெனில், அந்த பெருமைக்குரிய வீரர் தன்வசம் வைத்திருக்கும் ஒரு உலக சாதனையை பாதுகாக்க உதவுவது, வீரர்களுக்கு இடையேயான பரஸ்பர மரியாதையையும், உணர்வையும் வெளிப்படுத்துவதாகும் என்று வியான் முல்டர் தெரிவித்தார்
சாலையில் திடீர் வெடிப்பு:
சென்னை பெருங்குடி ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள சதாசிவம் சாலையில் தனியார் கட்டுமானம் நடந்து வரும் நிலையில் திடீரென 100 அடிக்கு மேல் சாலை வெடிப்புடன் உள்வாங்கியதால் குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சி
எடப்பாடி குற்றச்சாட்டு
" மக்களுக்கு பாதுகாப்பு இல்ல.. சிறுமி முதல் பாட்டி வரை பா*யல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்.. " - திமுக மீது அடுக்கடுக்காக இ.பி.எஸ். குற்றச்சாட்டு..
இந்தியாவுடன் வரி:
இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்புஅமெரிக்காவுக்கு எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்பதைக் குறிப்பிட்டு பல்வேறு நாடுகளுக்கு கடிதம் அனுப்பி வருவதாகப் பேட்டி