• எடப்பாடி பழனிசாமி நடத்தும் ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்‘ தேர்தல் பிரசார சுற்றுப் பயணத்தில் பங்கேற்க பாஜகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 7-ம் தேதி கோவையில் சுற்றுப் பயணத்தை அவர் தொடங்குகிறார்.
  • திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு தொடர்பாக 2-வது நாளாக நீதி விசாரணை தொடங்கியுள்ளது. கோவில் ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் வாக்குமூலம் பெற்ற நிலையில், இன்றும் தொடரும் விசாரணை.
  • கெக்கைன் போதை பொருள் கடத்தல் வழக்கில், பிரதீப் குமார், பிரசாத், கெவின், ஜான் ஆகியோருக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி, NDPS நீதிமன்றம் உத்தரவு. நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை.
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் சவரனுக்கு ரூ.320 உயர்வு. ஒரு கிராம் 9,105-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.72,840-க்கும் விற்பனை.
  • புதிய பான் கார்டு இணைப்பு பெற ஆதார் எண் கட்டாயம் என்ற மத்திய அரசின் புதிய விதி அமலுக்கு வந்தது. ஏற்கனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள் அதனுடன் ஆதார் எண்ணுடன் இணைக்க டிசம்பர் 31 வரை கெடு விதிப்பு. 
  • மனைவி பாஸ்போர்ட் பெறுவதற்கு கணவரின் அனுமதியோ, கையெழுத்தோ தேவையில்லை என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய மத்திய வெளியுறவுத்துறை முடிவு என தகவல்.
  • அரசு முறை பயணமாக கானா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான “The Officer of the Order of the Star of Ghana“ என்ற விருதை வழங்கி கவுரவித்தது கானா அரசு.
  • நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்து, சர்வதேச குற்றத் தீர்ப்பாய நீதிபதி உத்தரவு.
  • மருத்துவ உதவிக்கான நிதியை குறைத்து, மலிவு விலை பராமரிப்புச் சட்டத்தை பலவீனப்படுத்தும் மசோதாவை ட்ரம்ப் கட்சியினர் விரைந்து வருவதால், 1.6 கோடி அமெரிக்கர்கள் தங்கள் சுகாதார பாதுகாப்பை இழக்க உள்ளதாக முன்னாள் அதிபர் பராக் ஓபாமா வேதனை.
  • அனுமதியின்றி ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை திரட்டியதாக கூகுள் நிறுவனத்திற்கு 314 மில்லியன் டாலர்களை அபராதமாக விதித்தது அமெரிக்க நீதிமன்றம்.
  • இந்திய டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் சதம் விளாசி, அவ்வாறு செய்த 4-வது இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ள இந்திய கேப்டன் சுப்மன் கில்லுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு.