• திருப்புவனம் அஜித்குமார் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என முதலமைச்சர் கூறியபடி, அரசின் இலவச வீட்டு மனை பட்டா, அஜித்குமாரின் தம்பிக்கு அரசு வேலைக்கான ஆணை மற்றும் திமுக சார்பில் ரூ.5 லட்சம் ஆகியவற்றை அமைச்சர் பெரிய கருப்பன் நேரில் சென்று வழங்கினார்.

  • ஞானசேகரன் வழக்கு போல, திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கிலும் குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை பெற்றுத் தரப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் பேட்டி.

  • மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பேசியது தொடர்பாக, அண்ணாமலை, இந்து முன்னணியின் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் மீது வழக்கு.

  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்வு. அதன்படி, ஒரு கிராம் ரூ.9,065-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.72,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • 8 நாட்கள் சுற்றுப்பயணமாக கானா, ட்ரினிடாட் & டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா நாடுகளுக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி. பிரேசிலில் நடைபெற உள்ள ப்ரிக்ஸ் மாநாட்டிலும் பங்கேற்க உள்ளார்.

  • முதல் முறையாக வேலைக்கு செல்வோருக்கு ரூ.15,000 வரை மாத ஊதியம் வழங்கும் திட்டம், அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

  • டெல்லியில் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கும் எரிபொருள் விற்க தடை விதிக்கப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் 80 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர் போக்குவரத்து போலீசார்.

  • பஞ்சாப் மாநிலம் பெரேஸ்பூர் அருகே ஃபட்டுவாலா கிராமத்தில் உள்ள இந்திய விமானப்படை ஓடுதளத்தை, போலியான ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்த தாய் மற்றும் மகன் மீது வழக்கு.

  • எலான் மஸ்க்கை நாடு கடத்துவது குறித்து ட்ரம்ப் பேசியிருந்த நிலையில், அதற்கு பதிலளித்த எலான் மஸ்க், ட்ரம்ப்பின் விமர்சனம், விஷயத்தை பெரிதாக்க தன்னை தூண்டுவதாகவும், ஆனால் இப்போதைக்கு அதை தவிர்ப்பதாகவும் சாமர்த்தியமாக பதில் அளித்துள்ளார்.

  • டெஸ்ட் போட்டிகளில் இதுவரை வெற்றியையே சுவைக்காத எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இன்று இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. இதுவரை இங்கு விளையாடிய 8 போட்டிகளில் 7-ல் தோற்றுள்ளது இந்திய அணி. 1 போட்டி டிராவில் முடிந்துள்ளது.